மேலும் செய்திகள்
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
2 hour(s) ago | 1
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
3 hour(s) ago | 2
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
4 hour(s) ago | 47
புதுடில்லி: '' இனிமேல் தே.ஜ., கூட்டணியை விட்டு போக மாட்டேன்'' என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் உறுதி அளித்துள்ளார். 'இண்டியா' கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜ.,வுடன் கைகோர்த்து பீஹார் முதல்வராக பொறுப்பேற்ற நிதீஷ்குமார் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில் நிதீஷ் குமார் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இனிமேல் தே.ஜ., கூட்டணியை விட்டு போக மாட்டேன். பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அனைத்து மாநில வளர்ச்சியிலும் புதிய உயரங்களை தொடும். பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தான் எங்களுக்கு எஜமானர். அவர்களுக்குச் சேவை செய்வதே எங்களது அடிப்படை நோக்கம். மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் வளர்ச்சிப் பணிகள் வேகமடையும், மாநில மக்கள் மேம்படும். இவ்வாறு அந்த பதிவில் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
2 hour(s) ago | 1
3 hour(s) ago | 2
4 hour(s) ago | 47