உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாட்டுக் கொழுப்பு விவகாரம்: திருப்பதி லட்டு விற்பனை நிலவரம் இதுதான்!

மாட்டுக் கொழுப்பு விவகாரம்: திருப்பதி லட்டு விற்பனை நிலவரம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நேற்று 3.66 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. புகழ்பெற்ற திருப்பதி கோவில் லட்டுவில் விலங்கு கொழுப்புகள் கலக்கப்பட்ட விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. நாளை முதல் 3 நாட்கள் பரிகார பூஜை நடக்க இருக்கும் நிலையில், திருப்பதி லட்டுக்கான வரவேற்பு கடந்த சில நாட்களாக குறைந்திருத்தாக கூறப்பட்டது.செப்டம்பர் 19ம் தேதி மட்டும் லட்டு விற்பனையில் சிறிது ஏற்றம் இருந்தது. அன்று மட்டும் 3.59 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. அதற்கு அடுத்த நாளான செப்டம்பர் 20ம் தேதி 3.16 லட்சம் லட்டுகளே விற்பனையாகி இருந்தது. நேற்றைய தினம் பார்த்தால் லட்டுக்கள் விற்பனை ஏறுமுகம் நோக்கி நகர ஆரம்பித்து உள்ளது.20ம் தேதி 3.16 லட்சம் லட்டுகள் என்ற நிலைமை உல்டாவாகி நேற்று 3.66 லட்சம் லட்டுகள் விற்பனையாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே நாளில் 50 ஆயிரம் லட்டுகள் கூடுதலாக சேல்ஸ் ஆகி இருக்கின்றன.என்னதான் சர்ச்சைகள் சுழன்று அடித்தாலும், திருப்பதி லட்டு லட்டுதான், விற்பனையை அசைக்க முடியாது என்று சொல்லாமல் சொல்கிறது நேற்றைய விற்பனை நிலவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

lakshmikanthan S.B
செப் 22, 2024 22:41

திமுகவும் சீமானும் உடந்தையா?


lakshmikanthan S.B
செப் 22, 2024 22:38

இவர்களுக்கும் தொடர்பு கண்டிப்பாக இருக்கும்?


அப்பாவி
செப் 22, 2024 22:37

லட்டு ஃபேக்டரியோட திருமலா திருப்பதி பிரியாணி ஸ்டாலும் வெச்சிரலாம். நல்லாப் போகும்.


Ramesh Sargam
செப் 22, 2024 20:44

பகவான் பிரசாதம், வாங்க சிறிது தயக்கமிருந்தாலும், பிரசாதம் வாங்காவிட்டால், எங்கே தெய்வக்குற்றம் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் பக்தர்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள்.


சண்முகம்
செப் 22, 2024 20:23

லட்டு ருசியின் ரகசியம் கசிந்து விட்டதே!


அப்பாவி
செப் 22, 2024 20:03

போன வருஷம் திருப்பதி லட்டு சாப்புட்டேன். முன்னைய விட நல்ல ருசியா இருந்திச்சு.


T.sthivinayagam
செப் 22, 2024 19:17

பெருமாளே இது என்ன சோதனை!


D.Ambujavalli
செப் 22, 2024 18:23

திருப்பதி என்றால் மொட்டை போடாதவர்கள் கூட லட்டு வாங்கி தங்கள் யாத்திரையின் அடையாளமாக உறவினர் நண்பர்களுக்குக் கொடுப்பது தவிர, அதனை பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில்லை முற்றிலும் வியாபாரம்தான் , எல்லாப்பொருள்களிலும் செய்வதுபோல் இதிலும் கலப்படம் செய்தால் என்ன என்ற அலட்சியம் தான் காரணம் சாந்தி ஹோமம் செய்தபின் லட்டு விற்பனையை நிறுத்திவிடுவார்களா ? இதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எப்படியும் பக்தர்களுக்கு இனி லட்டை வாங்க மனம் வராது


Sivaprakasam Chinnayan
செப் 22, 2024 17:57

To prevent the scrubbing and prevent the dominance and irregularity.of certain people only the governing body d


வைகுண்டேஸ்வரன்
செப் 22, 2024 17:13

இதுவரை செய்து வைத்திருக்கும் லட்டுகளை என்ன செய்யப் போகிறார்கள்? அந்த நெய் டின்களைத் திருப்பி அனுப்பி விட்டார்களா? ஒரு பக்கம் அரசியல். இன்னொரு பக்கம் கண்டன கருத்துக்கள். ஆனால் அங்கே லட்டு விற்பனை தொடர்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை