உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டோலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

டோலி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சபரிமலை:'ப்ரீபெய்டு' டோலி முறையை அமலுக்கு கொண்டு வரும் தேவசம் போர்டின் முடிவுக்கு எதிராக டோலி தொழிலாளர்கள் நடத்திய திடீர் வேலை நிறுத்தம், அதிகாரிகளின் பேச்சை அடுத்து திரும்ப பெறப்பட்டது.சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய வரும் முதியோர், நோய் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளை சன்னிதானம் துாக்கி செல்ல டோலி பயன்படுத்தப்படுகிறது. பிரம்பு நாற்காலியில் இரு மூங்கில்களை கட்டி நான்கு பேர் சுமந்து செல்வர்.பம்பையில் இருந்து சன்னிதானம் சென்று திரும்ப 6,500 ரூபாய் கட்டணம் என, தேவசம் போர்டு நிர்ணயித்தது. ஆனால், டோலி தொழிலாளர்கள் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.இந்நிலையில், 300க்கும் மேற்பட்ட டோலி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் டோலியை நம்பி வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். சன்னிதானம் வர, வழியில்லாமல் பம்பையிலேயே பலரும் தங்கினர்.தொடர்ந்து நேற்று காலை பம்பையில் சப் - கலெக்டர் அருண் நாயர் தலைமையில் தொழிலாளர்களுடன் பேச்சு நடந்தது. கேரள உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படி மட்டுமே ப்ரீபெய்டு சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதற்காக நான்கு இடங்களில் கவுன்டர்கள் திறக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.இதையடுத்து போராட்டத்தை விலக்கி கொள்வதாக தொழிலாளர்கள் அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி