உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி உங்கள் போன் நம்பருக்கும் கட்டணம் கட்டணும்!: டிராய் புதிய பரிந்துரை

இனி உங்கள் போன் நம்பருக்கும் கட்டணம் கட்டணும்!: டிராய் புதிய பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இனி மொபைல் மற்றும் லேண்ட்லைனில் பேசுவதற்கு ரீசார்ஜ் மட்டுமல்லாமல் மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் வசூலிக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.சிம் கார்டினை சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலவசமாக வழங்கினாலும், மொபைல் போன்களில் பிறரை தொடர்புகொள்ள ரீசார்ஜ் செய்வது கட்டாயம். ஒவ்வொரு நிறுவனங்களும் வெவ்வேறு விதமான கட்டணங்களை நிர்ணயித்து ரீசார்ஜ் கட்டணங்களை வசூலித்து வருகிறது. அதிலும் இன்டர்நெட் சேவைக்கு கூடுதலாகவும் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும். இந்த நிலையில் இனி இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருகிறது. இந்த கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இந்த கட்டணத்தை வசூலித்து கொள்வார்கள். இதற்காக ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் ஆய்வு செய்து வருகிறது.எண்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அமலில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

enkeyem
ஜூன் 16, 2024 10:12

இந்த செய்தி உண்மையல்ல என்று டிராய் மறுத்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் மீது வீண் களங்கம் கற்பிக்க இந்த செய்தி விஷமிகளால் பரப்பப் பட்டுள்ளதாக தெரிகிறது


Bhaskaran
ஜூன் 16, 2024 08:24

நிதியமைச்சரின் முதல் கிஃப்ட்


tmranganathan
ஜூன் 16, 2024 07:45

our people get free rice, electricity, urea, fertiliser and for kids free food. so you have to pay for TRAI ges.


karutthu
ஜூன் 14, 2024 18:32

இனி வரும் ஐந்து வருடங்களுக்கு இந்த பீ ஜே பீ அரசாங்கம் வரி போட்டு நம்மளை சாகடித்து விடுவார்கள் இதை எதிர் கட்சியில் இருக்கும் ப சிதம்பரம் பாராட்டுவார் காங்கிரஸ் , பீ ஜே பீ இரண்டு கட்சிகளையும் திருத்தவே முடியாது


jagath kumar
ஜூன் 14, 2024 17:08

Next ges for owning a phone


jagath kumar
ஜூன் 14, 2024 17:07

Next they ge for keeping a phone


Suresh
ஜூன் 14, 2024 13:27

So if we pay for phone number then no need to recharge every month minimum amount for service provider ? Number will not be suspend and will get incoming call free ?


Narsyanan
ஜூன் 14, 2024 12:05

ட்ரை ரெகுலேஷன் வந்தபிறகு தகவல்தொர்பு துறை, டிடிஎச் மிகவும் விலை உயர்ந்து விட்டது. கேபிள் டிடிஎச் ல் எதற்கு இரண்டு வகை எச்டி சேனல்ஸ் மட்டுமே குறைந்த கட்டணத்தில் ஒளிபரப்பு செய்ய வழி வகுக்க வேண்டும். of


Chandrasekaran Balasubramaniam
ஜூன் 14, 2024 08:51

இனி வீதிகளில் நடந்து சென்றால் கட்டணம் விதித்தால் ஆச்சர்யம் இல்லை.


visu
ஜூன் 14, 2024 06:49

அயல் நாடுகளல் பல நல்ல விஷயங்களை பின் பற்றுகிறார்கள் அதையும் பின் பற்றலாமே


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி