உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.யில் அத்துமீறிய வழக்கு : பயங்கரவாத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒப்புதல்

பார்லி.யில் அத்துமீறிய வழக்கு : பயங்கரவாத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் விசாரிக்க ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்டில் அத்துமீறி வண்ண புகை பரவ செய்த வழக்கினை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த டில்லி துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்தாண்டு டிச.13-ம் தேதி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது, லோக்சபாவிலும், பார்லிமென்ட் வளாக வாயிலிலும், சிலர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து அங்கிருந்த எம்.பி.க்கள் அலறியடித்து வெளியேறினர். பின்னர் குழல் வாயிலாக வண்ணப் புகையை பரவச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தினர். இது தொடர்பாக மனோரஞ்சன், டி, சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் ரனோலியா, லலித் ஜஹா, மகேஷ் குமவாத் என 6 பேரை டில்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த வழக்கை பயங்கரவாத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த டில்லி துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 06, 2024 21:26

விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து, அத்துமீறியவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். பிற்காலத்தில் இதுபோன்று ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது.


subramanian
ஜூன் 06, 2024 20:47

குற்றம் செய்தவர்களை தீவிரவாதிகளாக கருதி நடவடிக்கை எடுப்பது சரியே.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை