உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிவேணி சங்கமம் குளிக்க உகந்ததாக இல்லை: தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

திரிவேணி சங்கமம் குளிக்க உகந்ததாக இல்லை: தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

புதுடில்லி, 'மஹா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர் மாசடைந்துள்ளதால், குளிப்பதற்கு உகந்ததாக இல்லை' என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில், கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, வரும் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கானோர் இங்கு புனிதநீராடி வருகின்றனர்.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டுள்ளனர். முன்னதாக, கங்கை மற்றும் யமுனை நதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரிய மனுக்களை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு சமீபத்தில் விசாரித்தது. அப்போது, கங்கை மற்றும் யமுனை நதிகளில் உள்ள நீரின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அந்த அமர்வு உத்தரவிட்டது.இதன்படி, மஹா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ள நீரின் மாதிரிகளை எடுத்து, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை கடந்த 3ம் தேதி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அந்த அமைப்பு தாக்கல் செய்தது.அதன் விபரம்:திரிவேணி சங்கமத்தில் எடுக்கப்பட்ட நீரின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அது குளிப்பதற்கு உகந்தது அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீரில், 'பேக்கல் கோலிபார்ம்' என்ற பாக்டீரியா தொற்று அதிகளவில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஹா கும்பமேளா நிகழ்வு 1 மாதத்திற்கு மேல் நீடித்து வந்தாலும், மகா பவுர்ணமி போன்ற முக்கிய நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். அப்போது, மனித கழிவுகள் அதிகளவில் நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக, அவற்றின் வழியே பரவும் பேக்கல் கோலிபார்ம் என்ற பாக்டீரியா தொற்று இருப்பதால், அந்த நீர் மாசடைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு, உத்தர பிரதேச அரசும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்து விரிவான நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
பிப் 19, 2025 17:40

பூஜையறையில் வைத்து நாம் எல்லோரும் பூஜை செய்து கொண்டு இருக்கிறோம்.


J.Isaac
பிப் 19, 2025 16:34

அடுத்து தடுப்பூசி


கங்காபாய்
பிப் 19, 2025 13:31

பாம்புக்கடிக்கு பாம்பின் விஷமே மருந்து.. கும்பமேளா தண்ணி பல கிருமிகளின் கூடுகையில் வந்த சர்வரோக நிவாரணி. கும்பமேளாவில் குளிச்சவங்க யாருக்காவது நோய் வந்திருக்கா? முழுக்கு போட்டுட்டு ஒரு மடக்கு குடிச்சிட்டு வந்தால் நூறு வருஷம் வாழலாம்.


Seekayyes
பிப் 19, 2025 10:15

நான் இந்து, சத்தியமாக பெரியாரிஸ்ட்டும் கிடையாது, ஒரு முறைகூட திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தியதும் கிடையாது. என் தனிப்பட்ட அபிப்ராயம் மஹா கும்பமேலவை 45நாட்கள் நடத்த வேண்டிய அவசியம் என்ன? 15 நாட்களே அதிகம். மேலும் காவல்துறை மற்ற துறைகள் அனைவரும் களைத்து போவது ஒரு புறம், ஆற்று நீர் மாசற்ற ஆவதும், இந்தியர்களுக்கே உரித்தான அசுத்தம், சுற்றுசூழ்ல் மாசு, பக்தர்களின் அவதி, காலாவதியான சாப்பாடு போன்றவைகளால் உடற்கேடு ஆகியவை நடந்தேறும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.


nisar ahmad
பிப் 19, 2025 09:53

அட இன்னும் பத்து கோடி பேர் பேல வேண்டியிருக்கு அதுக்குள்ள ரிப்போர்ட் சப்மிட் பண்ணிட்டீங்க ...


Velan Iyengaar
பிப் 19, 2025 08:33

மாநில அரசின் மெத்தனம் என்று எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்றால் செய்தி வந்திருக்கும் ....


Velan Iyengaar
பிப் 19, 2025 08:32

இதுக்கு நேரு தான் காரணம் யுவர் ஆனார்


சுவாதி
பிப் 19, 2025 07:11

தப்பான விவரம். 55 கோடி பேர் முங்கி எழுந்ததில் அவிங்க மேலே இருந்த கிருமிகள் வெளியேறி சங்கமத்தில் இருந்த கிருமிகளை அழிச்சிருச்சு. இன்னும் 144 வருஷத்துக்கு கவலையில்லை.


சோதி
பிப் 19, 2025 07:08

அடப்பாவிங்களா... இன்னும் ஒரு வாரத்தில் முடியப் போகுது. இப்போ நிறுத்தி நிதானமா அறிக்கை குடுக்கறீங்களே. 55 கோடி பேர் முங்கி எழுந்தப்புறம்.


Kasimani Baskaran
பிப் 19, 2025 06:11

தேசிய அளவுக்கு போவதற்கு முன் கூவத்தின் நிலை என்ன என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை கேள்வி கேட்டு இருக்கலாம்.


sar printers
பிப் 19, 2025 07:09

இங்க யாரும் குளிக்கவில்லையே


abdulrahim
பிப் 19, 2025 09:55

நீ வேணா கூவத்துல குளிச்சு பார்த்திட்டு சொல்லேன்....


Haja Kuthubdeen
பிப் 19, 2025 10:35

படித்தவரா இருக்கிறீர்கள்...கூவத்தையும் கங்கையையும் ஒப்பிடுகிறீர்...கூவம் புனித நதியல்ல..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை