உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றி கிடைத்தால் தேர்தல் முறையை நம்புவதும் தோல்வி கண்டால் துாற்றுவதும் ஜனநாயகமல்ல: ராகுலுக்கு பா.ஜ., அட்வைஸ்

வெற்றி கிடைத்தால் தேர்தல் முறையை நம்புவதும் தோல்வி கண்டால் துாற்றுவதும் ஜனநாயகமல்ல: ராகுலுக்கு பா.ஜ., அட்வைஸ்

புதுடில்லி: ''தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, தேர்தல் கமிஷனை நம்ப வேண்டும் என்ற மனப்பான்மை, ஜனநாயகத்திற்கு பாதகமானது,'' என பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலை வர் அமித் மாள்வியா விமர்சித்துள்ளார். கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

அபார வெற்றி

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில், 50 இடங்களை கைப்பற்றி பா.ஜ.,வும் வெற்றியை ருசித்தது. இந்நிலையில், 'உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசின் வெற்றி, மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் கருத்து கூறியிருந்தார். மேலும், வெற்றிக்காக பாடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களையும் ராகுல் பாராட்டினார். இதுகுறித்து பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது: தேர்தல் முடிவுகள் பாதகமாக வெளியானால் போதும், உடனடியாக தனது வழக்கமான பாணியை ராகுல் கையாள ஆரம்பித்து விடுவார். மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு, ஓட்டு திருட்டு என வசைபாடுவார்; தேர்தல் முறைகளையே கேள்வி கேட்பார். அதே நேரத்தில் தங்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துவிட்டால், குறை சொன்ன அந்த தேர்தல் முறை யை அப்படியே அவர் ஏற்றுக் கொள்வார். அது பற்றி எந்த விமர்சனத்தையும் முன் வைக்க மாட்டார். வெற்றி பெற்றால் மட்டுமே தேர்தல் முறைகளை நம்புவேன் என்பது ஜனநாயகம் அல்ல. அப்படியான நம்பிக்கையில் ஜனநாயகம் நிச்சயம் இயங்காது. வெற்றி என்றால் தேர்தல் முறையை கொண்டாடுவதும், தோல்வி என்றால், அதே தேர்தல் முறை மீது சேற்றை வாரி வீசுவதும் தவறானது. இப்படியான அணுகுமுறை ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. மாறாக, மக்களிடையே ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும்.

விமர்சனம்

நம்பகமான மாற்று கட்சியாக உருவாக வேண்டும் என விரும்பினால், முதலில் என்ன நடந்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். தேர்தலில் தொடர்ந்து பங்கெடுத்த பின், அதன் மு டிவுகள் பற்றி ஆதாரம் இல்லாமல் கேள்விகளை கேட்பது அரசியல் நேர் மையை கேலி கூத்தாக்கிவிடும். ஜனநாயக நெறிமுறைகளையும் கேள்விக்குறியாக்கிவிடும். ஒரு தலைவரை பற்றியோ, கட்சியை பற்றியோ இந்த விமர்சனத்தை முன் வைக்கவில்லை. நம்பகத்தன்மை, பொறுப்பு மற்றும் நேர்மையான அரசியல் பற்றி எதிர்க்கட்சி ஆழமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்தை பகிர்கிறோம். ஜனநாயகம் வெறும் சாக்குப்போக்குகளை கோராது; தோல்வியையும் மதிக்கும் தலைமை பண்பை தான் கோருகிறது. அதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சத்தமின்றி சாதித்த ஆம் ஆத்மி

கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டது. கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் பலத்த போட்டி நிலவிய சூழலில், ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் சத்தமின்றி மூன்று இடங்களில் வெற்றி வாகை சூடியது. அந்த மூன்று இடங்களிலும் அக்கட்சியின் பெண் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள கரிம்குன்னம் 13வது வார்டில் போட்டியிட்ட பீனா குரியன், வயநாடு மாவட்டத்தின் முல்லன்கோலி 16வது வார்டில் போட்டியிட்ட சீனி அந்தோனி, கோட்டயம் மாவட்டத்தில் உழவூர் 4வது வார்டில் போட்டியிட்ட ஸ்மிதா லுாக் ஆகியோரது வெற்றி மூலம், கேரளாவில் ஆம் ஆத்மி கால்பதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Skywalker
டிச 15, 2025 09:25

DMK WON IN TAMILNADU USING EVM, INDI PARTIES WON IN PUNJAB, DELHI, KARNATAKA, HARYANA, WEST BENGAL, KERELA, TELENGANA, UTTARAKHAND, JAMMU AND KASHMIR, JHARKHAND, USING EVM ONLY, AO IF EVM IS A BJP SCAM SHALL WE CANCEL ALL THESE WINNINGS? USA DOESN'T USE EVM BECAUSE THEY HAVE ONLY TWO POLITICAL PARTIES AND VERY LESS RIGGING ETC, WE ALL KNOW HOW MUCH SCANDAL AND RIGGING HAPPENED WITH BALLOTS, NEVER AGAIN


பேசும் தமிழன்
டிச 15, 2025 07:37

பப்பு..... கேரளாவில் ஏராளமான இடங்களில் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற்று இருக்கிறது.... என்ன ஓட்டு திருட்டில் புகுந்து விளையாடி விட்டீர்கள் போல தெரிகிறது.... இல்லையென்றால் கான் கிராஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லையே .... நீங்கள் சொன்ன அதே ஓட்டு திருட்டு தானே ??


RAMAKRISHNAN NATESAN
டிச 15, 2025 07:35

அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஏதேதோ பேசி, எதையெதையோ செய்கிறது காங்கிரஸ் / ராகுல் ......


Kasimani Baskaran
டிச 15, 2025 03:58

திருமங்கலம் சூத்திரம் இந்தியா முழுவதும் பரவினால் இ வி எம் க்கு வேலை இல்லை. ஓட்டுக்கு இவ்வளவு என்று முடிவு செய்து விட்டால் மொத்த நாட்டையும் குத்தகைக்கு எடுத்து போல ஆகிவிடும். ஜனநாயகத்தை சிதைத்த பெருமை திருமங்கலம் சூத்திரத்தை கண்டுபிடித்த முத்தமிழ் வித்தக[வ]ரையே சாரும்.


Sivakumar
டிச 15, 2025 02:38

உள்ளாட்சி தேர்தல், அப்பறோம் ஒரு சட்டசபை இடைத்தேர்தல் இப்படி ஏதாவது கொசுறுகளில் நீங்க உங்க வாலை சுருட்டிக்கிவீங்க. எப்போ உங்களுக்கு தேவையோ அப்போதனை போட்டில விளையாடுவீங்க. இப்படி சொல்றதுக்காகவே ஒன்னு ரெண்டு தேர்தல்களின் உங்ககைவரிசையை காட்டாமல் விடுவது புரியாத கேணைகளை நாங்க ?


xyzabc
டிச 15, 2025 02:26

நல்ல அட்வைஸ் மாளவியா ஜி. இந்த அட்வைஸ் எங்க வூர் திராவிட செம்மல்களுக்கும் பொருந்தும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.


john
டிச 15, 2025 01:25

வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் ஓட்டு சீட்டு முறைதான் பின்பற்றுகிறார்கள், இன்னும் கூட அவர்களுக்கு EVM மேலுள்ள நம்பிக்கை இல்லை, அப்படிருக்க இந்தியா EVM முறையை பின்பற்றுகிறார்கள், EVM வந்த பிறகுதான் பிஜேபி தொடர்ந்து வெற்றி பெறுகிறது. அவர்களுக்கு தெரியும் பஞ்சாயத்து தேர்தலினால் பிஜேபிக்கு பின்னடைவு ஒன்றும் இல்லையென்று.


vivek
டிச 15, 2025 06:25

நீ இன்னும் அங்கு அபுதாபியில் ஒட்டகம் தான் மெய்க்கவேண்டும்


rahamath, கீழக்கரை
டிச 15, 2025 08:51

ஒட்டகம் மேய்த்தால் கூட பரவாயில்லை. இங்கே இருந்து அங்கே அடிமைகளாக போய் சேவை செய்து பிழைப்பு நடத்தும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை