கஞ்சா விற்ற இருவர் கைது
தங்கவயல்: கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட கெம்பாபுரா என்ற இடத்தில் ஆந்திர மாநிலம் வி.கோட்டாவை சேர்ந்த இருவர், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சேத்தன் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த ஆந்திர மாநிலம் வி.கோட்டா அம்பேத்கர் நகரை சேர்ந்த வாசிம், 30, சவுடேப் பள்ளி உசேன் குட்டி, 32, ஆகிய இருவரை கைது செய்தனர். 33 கிலோ 510 கிராம் எடை உள்ள உலர்ந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாகும்.