உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து இருவர் பலி

சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து இருவர் பலி

பரிதாபாத்:புதுடில்லி அருகே, சுங்கச்சாவடியில் மோதிய லாரி தீப்பிடித்து, டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும், உடல் கருகி உயிரிழந்தனர்.தேசிய தலைநகர் பிராந்தியம், குண்ட்லி- - காஜியாபாத் - -பல்வால் விரைவுச் சாலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சரளைக் கற்கள ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த லாரி, திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய லாரி, மவுஜ்பூர் சுங்கச்சாவடியில் மோதியது. உடனே லாரி தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் தப்பிக்க முடியாமல் சிக்கி, லாரிக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினர், இரு உடல்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்த இருவரும், மேவாட் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை