உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய பட்ஜெட் கூட்டம்: ஒத்துழைக்குமா எதிர்கட்சிகள் ?

மத்திய பட்ஜெட் கூட்டம்: ஒத்துழைக்குமா எதிர்கட்சிகள் ?

புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டம் நாளை (ஜூலை-22) துவங்க உள்ள நிலையில், மத்திய அரசின் சார்பில் இன்று (ஜூலை 21) அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் இந்த கூட்டம் பார்லி., கூட்ட அரங்கில் நடந்தது. முதன் முதலாக எதிர்கட்சி தலைவராக ராகுல் கலந்து கொள்ளும் கூட்டம் இதுவாகும். சில காரணங்களுக்காக திரிணமுல் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இது குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொறுப்பு தான். ஜனநாயகத்தை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பார்லிமென்டில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயாராக உள்ளோம்.

பட்ஜெட்

சிறப்பு அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசும் போது, ​​லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் குறுக்கிடப்பட்டது. இது பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. பிரதமர் பேசும்போது, ​​மக்களும், நாடும் அதைக் கேட்க வேண்டும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என நம்புகிறோம். நல்ல பட்ஜெட்டை கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

என்ன செய்யலாம்?

பார்லி., பட்ஜெட் கூட்டம் துவங்கவுள்ள நிலையில் ஆளும் அரசுக்கு எந்த வகையில் நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து காங்., தலைமையிலான எதிர்கட்சிகள் நாளை (ஜூலை-22) ஆலோசனை நடத்துகின்றன. காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் சோனியா இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே 82 வது பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளர். கார்கே நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Poongavoor Raghupathy
ஜூலை 22, 2024 22:24

In Parliament the opposition Parties especially Rahul Gandhi must understand that they are not only meant for accusing Ruling Party but also jointly discuss the solutions and action plans for solving problems .The job of opposition does not end by shouting against rulers.Both Ruling and opposition Parties must join together to come out from the problems.


sankaranarayanan
ஜூலை 22, 2024 02:02

பாராளு மன்றத்தை சரிவர நடத்த முடியாமல் குறுக்கிடும் நபர் யாராக இருந்தாலும் சரி அவைத்தலைவர் அவர்களை கூண்டோடு தூக்கி வெளியே கொண்டுவந்து வைத்துவிட்டு அவைக்கு குந்தகம் விளைவிக்காமல் நடத்த வேண்டும் இதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை இதில் தயக்க ஏன்?


Barakat Ali
ஜூலை 21, 2024 17:31

நாட்டைப்பற்றிய அக்கறை உள்ளவர்களாக இருந்தால் ஒத்துழைப்பார்கள் ......


sundarsvpr
ஜூலை 21, 2024 16:44

99 உறுப்பினரகொண்ட கட்சியின் தலைவர் ராகுல் . அதாவது பாராளுன்ற எதிர்க்கட்சி தலைவர். எதிர்க்கட்சிகளின் தலைவர் அல்ல. எனவே ராகுலின் பேச்சை விவாதத்தை எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்று கருதமுடியாது. எதிர் கட்சிகள் பலவை காங்கிரஸ் கொள்கைகளுக்கு உடன்பாடு அற்றவை. . ஆளும் கட்சியில் நரேந்திரன் அமிட்சா ராஜ்நாத் சிங் என்ற வரிசை இருப்பதுபோல் எதிர்க்கட்சிகளின் வரிசை இருக்கவேண்டும் ராகுல் முதல் நம்பராக இருக்கவேண்டும் என்பதில்லை.


Kumar Kumzi
ஜூலை 21, 2024 13:47

தேசத்துரோகி இத்தாலிக்காரன் எப்படி ஒத்துழைப்பான்


Sridhar
ஜூலை 21, 2024 12:36

இவர்கள் ஒத்துழைப்பு எதர்க்கு என்று புரியவில்லை. சாதாரண படஜெட் மசோதா பாஸ் செய்வதற்கு ஆளும் ஆட்சியிடம் இப்போது இருக்கும் மேஜாரிடியே போதுமே? நாகரீகமாக விவாதம் செய்தால் சரி, இல்லையென்றால், பாராளுமன்ற நியதிகளை கடைபிடிக்காமல் கூச்சல் குழப்பம் செய்ய எத்தனித்தால், அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல், வெளியே தள்ள வேண்டியதுதானே? இதுக்கு போயி அவுங்கள கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தினா, அவுங்களும் நமக்கு இவ்வளவு மௌசு இருக்குது போல னு நினைச்சுகிட்டு மேற்கொண்டு அவங்களோட அநாகரீக செயல்களை இன்னும் வலுவா செய்வார்களே? யார் யாரை எங்கே வைக்கவேண்டும் என்று தெரியாமல் ஆட்சி நடத்துகிறார்களே? இவ்வாறு செய்வதால், மக்கள் பணத்துல கோடி கணக்கா செலவு செஞ்சு நடத்துற பார்லிமென்ட் நேரம் வீணாபோக்குறதுக்கு இந்த ஆளும் கட்சியும் ஒரு காரணம் தான்.


Nandakumar Naidu.
ஜூலை 21, 2024 10:50

ஒத்துழைக்கவில்லை என்றால் குண்டுகட்டாக தூக்கி வெளியில் வீசுங்கள். இது போன்ற எம்பிக்கள் நாட்டுக்கு தேவையில்லை.


Swaminathan L
ஜூலை 21, 2024 10:39

பட்ஜெட் வெளீயீடு சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் அனுமதியாது. அவை எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதை அழுத்தந் திருத்தமாகத் தெரிவிக்கும் நிகழ்வு அது. ஒத்திவைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானம் என்றோ, ஏதாவது பதாகைகளை தன் தூக்கிக்கொண்டு சபாநாயகர் முன்போ, தொடர் கூச்சல் போட்டோ ஆர்ப்பாட்டம் செய்து விட்டு கூண்டோடு வெளியே போகும். பாராளுமன்ற வாசலில் கூட்டமாக நின்று கோஷம் போட்டு விட்டு பேட்டி கொடுக்கும். இதெல்லாம் நடக்காதிருந்தால் தான் ஆச்சரியம்.


Vijayakumar Srinivasan
ஜூலை 21, 2024 22:27

உண்மை தான் சார்.எதிர்கட்சிஎன்பது.எப்போதும்வெளிநடப்புகட்சியாகதான்உள்ளதுஇக்கட்சிகள்முரன்பட்டதாகவும்.குறிகோள்அற்றதாகவும்உள்ளது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை