உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

உலகை பிளவுபடுத்தும் மூன்று தீயசக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ''எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் எனும் மூன்று தீயசக்திகளை எதிர்த்து போராடும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதன்மையான குறிக்கோளை அடைய நேர்மையான பேச்சு முக்கியம்,'' என, பாகிஸ்தானில் தெரிவித்த நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''இரு அண்டை நாடுகளுக்கு இடையே உறவுகள் ஏன் முறிந்தன என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.பாகிஸ்தானில் நடக்கும் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான பிரதிநிதிகள் குழு இஸ்லாமாபாத் சென்றிருந்தது. நேற்று நடந்த மாநாட்டில் ஜெய்சங்கர் பேசியதாவது:நம்பிக்கை இல்லாவிட்டாலோ அல்லது போதுமான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தாலோ, நட்பைக் குறைத்துவிட்டாலோ, நல்ல அண்டை நாடு இல்லாமல் இருந்தாலோ, சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காரணங்களும், அதற்குத் தீர்வு காண்பதற்கான காரணங்களும் நிச்சயமாக இருக்கும்.எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள், பிரிவினைவாதம், தீவிரவாதத்தால் வகைப்படுத்தப்பட்டால், அவை வர்த்தகம், ஆற்றல் ஓட்டம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க வாய்ப்பில்லை.பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மேலும், பரஸ்பர நம்பிக்கையுடன் கூட்டாக முன்னோக்கி நகர்ந்தால், எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகள் பெரும் பயனடையலாம்.எனவே, எஸ்.சி.ஓ., உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, நட்பு மற்றும் நல்லுறவு அவசியமாகிறது. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். அது, உண்மையான கூட்டாண்மையால் மட்டுமே சாத்தியம். ஒருதலைபட்ச முடிவுகளால் அல்ல. அண்டை நாடுகளுடன் நல்லுறவும், பரஸ்பர நம்பிக்கையும் இல்லாமல் போனால், அது ஏன் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் இன்றைய முக்கிய பிரச்னையாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் எனும் மூன்று தீயசக்திகளை எதிர்த்து போராடுவதே எஸ்.சி.ஓ., அமைப்பின் குறிக்கோளாக உள்ளது. அதை அடைய நேர்மையான பேச்சு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டுக்கு பின், எஸ்.சி.ஓ., அமைப்பின் எட்டு முடிவுகள் அடங்கிய ஆவணங்களில் ஜெய்சங்கர் கையெழுத்திட்டார். அடுத்த எஸ்.சி.ஓ., மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் ரஷ்யாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்களால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிக்கல் இருந்து வரும் நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை.

8 ஒப்பந்தங்கள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், இந்தியாவின் பங்களிப்பு தொடர்பான ஒப்பந்தங்களின் விபரம்:1 ஓர் பூமி, ஓர் குடும்பம், ஓர் எதிர்காலம் என்ற திட்டத்தின் முன்னெடுப்பு2 எஸ்.சி.ஓ., ஸ்டார்ட் அப் மன்றம், ஸ்டார்ட் அப்பில் சிறப்பு பணிக்குழு அமைத்தல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்3 டிஜிட்டல் பொது உட்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்தல்4 சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா முன்னெடுத்துள்ள, 'லைப்' திட்டத்தை முன்னுதாரணமாக பின்பற்றுவது5 தினை போன்ற சத்துள்ள தானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் வாயிலாக உலகளாவிய உணவு பாதுகாப்பை மேம்படுத்துதல்6 சர்வதேச சட்டம், ஐ.நா., மற்றும் எஸ்.சி.ஓ., சாசனத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க நியாயமான மற்றும் சீரான இணைப்பு திட்டங்களை நிலைநிறுத்துதல்7 உலக வர்த்தக மைய விதிகள் அடிப்படையிலான, பாரபட்சமற்ற, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வெளிப்படையான பலதரப்பு வர்த்தக அமைப்பை மீண்டும் வலியுறுத்துதல்8 பலதரப்பு வர்த்தக அமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் உலகளாவிய நிலையான வளர்ச்சியைத் தடுக்கும் நடவடிக்கைகள், ஒருதலைபட்ச பொருளாதார தடைகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளை எதிர்ப்பது.

பாக்., பிரதமர்

மறைமுக பேச்சுசாலை மற்றும் கடல் மார்க்கமாக ஆசியாவை ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும், 'சீன பெல்ட் அண்டு ரோடு' திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது. சீனா - பாகிஸ்தான் வர்த்தக உறவை வலுப்படுத்தும் பொருளாதார வழித்தட திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது. இதில், இந்தியா ஆர்வம் காட்டவில்லை. அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போதும், வர்த்தக மற்றும் போக்குவரத்து இணைப்பு திட்டங்கள், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்க கூடாது என தெரிவித்தார்.பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், ''குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் இத்தகைய திட்டங்களைப் பார்க்காமல், பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியத்தின் பகிரப்பட்ட பார்வையை முன்னேற்றுவதற்கு முக்கியமான நம் கூட்டு இணைப்புத் திறன்களில் முதலீடு செய்வோம்,'' என, இந்தியாவை மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
அக் 17, 2024 14:40

பாகிஸ்தானுக்கு உரைக்காது.


Rajendra Kumar
அக் 17, 2024 12:31

உபி வந்துட்டார்பா


raja
அக் 17, 2024 09:35

சீனா மற்றும் பாக்குடன் கூட்டு சேர்ந்தால் தான் இந்திய பொருளாதாரம் வளரும் என்றால் அப்பேர் பட்ட ... வேண்டாம் என்பது இந்தியர்கள் கருத்து...


Priyan Vadanad
அக் 17, 2024 08:58

கூடவே ஒரே தலைவர், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே சட்டம் இத்யாதி இத்யாதி என்று நாம் எழுதுகிறோம்.


ஆரூர் ரங்
அக் 17, 2024 09:30

ஒரிய மொழி பேசும் ஜனாதிபதி. குஜராத்தி பிரதமர். இதில் ஒரே மொழிப் பிரச்சினை எங்கு வந்தது? அப்துல் கலாமை ஜனாதிபதியாக ஆக்கிய கட்சிதான் ஆட்சியிலுள்ளது.


ஆரூர் ரங்
அக் 17, 2024 09:32

எந்த இஸ்லாமிய அல்லது ஐரோப்பிய நாட்டிலும் மதங்களுக்கு தனித்தனி சிவில் சட்டங்கள் இல்லை. ஒரே சட்டம்தான்.


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 10:31

டீம்கா கொத்தடிமைக்கு எரிச்சலோ எரிச்சல் ....... பரிதாபம் ...... ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளட்டும் ........


Barakat Ali
அக் 17, 2024 06:59

நல்ல தைரியம் ......... பாராட்டுக்கள் ......... ஆனால் இவரைப் போன்றவர்கள் தமிழகத்தில் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது .......


Sundar R
அக் 17, 2024 06:59

As a senior diplomat possessing proven experience of 38 years in foreign affairs, Shri Jaishankar knows how to deal with complex relations with Canada, Pak & China. The greatness of Shri Jaishankar is that during talks, he is capable of resolving the problems of other countries also.


சமீபத்திய செய்தி