உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏழே நாள்!: அமலுக்கு வரும் குடியுரிமை சட்டம்

ஏழே நாள்!: அமலுக்கு வரும் குடியுரிமை சட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா : பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும், நடைமுறைக்கு வராத சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம், இன்னும் ஏழு நாட்களுக்குள் அமலுக்கு வந்துவிடும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழலில், இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து, அகதிகளாக நம் நாட்டில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க மோடி அரசு முடிவு செய்தது. இதற்காக குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தது. அது, 2019ல் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியது. ஜனாதிபதியும் உடனடியாக ஒப்புதல் அளித்ததால், சட்டம் ஆனது மசோதா. ஆனால், இதுவரை அந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

கால நீட்டிப்பு

பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அந்த சட்டத்திற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா குழுவிடம் இருந்து ஆறு மாதத்துக்கு ஒருமுறை கால நீட்டிப்பு பெற வேண்டும். அந்த வேலையை உள்துறை அமைச்சகம் தவறாமல் செய்து வருகிறது.கால தாமதத்துக்கு முக்கிய காரணம், நாட்டின் பல பகுதிகளில் இந்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம். 'அண்டை நாடுகளில் கொடுமைகளுக்கு பயந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் அனைவருக்கும் குடியுரிமை அளிப்பதே நியாயம். 'அதை விடுத்து, முஸ்லிம்களை தவிர்த்து மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சட்டம் வழி செய்கிறது; இந்த பாரபட்சத்தை ஏற்க முடியாது' என எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கூறின. 'சட்டத்தில் குறிப்பிட்டுள்ள மூன்றுமே முஸ்லிம் நாடுகள். அங்கே மற்ற மதத்தினர் தான் சிறுபான்மை. அவர்கள் தான் கொடுமைக்கு ஆளாகி இந்தியாவுக்குள் தஞ்சம் வருவரே தவிர, முஸ்லிம்களுக்கு அந்த பிரச்னை இல்லை. ஆகவே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அவசியமே எழவில்லை' என அரசு பதில் சொன்னது.என்றாலும் எதிர்க்கட்சிகள் திருப்தி அடையவில்லை. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார். வங்கதேசத்தில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் ஊடுருவி நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

தடுக்க முடியாது

வழக்கமாக அவர்கள் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டளிக்கின்றனர். எனவே, மம்தா இதை இழப்பாக பார்க்கிறார். இந்த சட்டத்தின் ஆங்கில பெயரில் உள்ள முதல் வார்த்தைகளை சேர்த்தால் சி.ஏ.ஏ., என வருகிறது. அதை குறிப்பிட்டு, “தேர்தலுக்காக மத்திய அரசு கா கா என கூவுகிறது,” என்றார் மம்தா. ஆனால், 'குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்தார். சட்டம் அமலுக்கு வரப்போகும் தகவலை மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று தெரிவித்தார். இவர், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்; மத்துவா என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகத்தினர், மேற்கு வங்கத்தில் கணிசமாக உள்ளனர். இவர்கள், 1950 முதல் மேற்கு வங்கத்தில் குடியேறியவர்கள்.

அமலுக்கு வராது

அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய மோடி அரசு, தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்தப் போவதாக கூறியிருப்பதை, தேர்தலுக்கான அடுத்த அதிரடி என்கின்றன எதிர்க்கட்சிகள். திரிணமுல் நிர்வாகி குணால் கோஷ், ''மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வராது என்பதை முதல்வர் மம்தா ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். ''லோக்சபா தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Vaduvooraan
ஜன 30, 2024 19:38

மத அடிப்படையில் நாட்டை பிரித்து தனி நாடு கேட்டபோதே அண்ணல் அம்பேத்கர் ஒரு யோசனையை முன்வைத்தார். மதத்தை காட்டி பிரிந்து போகட்டும் ஆனால் மேற்கு பஞ்சாபில் மற்றும் கிழக்கு வங்கத்திலிருக்கும் ஹிந்துக்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு அது போலவே இங்கிருக்கும் முஸ்லிம்களும் அவர்கள் விரும்பி கேட்டு அடைந்த பாகிஸ்தானுக்கு அனுப்பபடவேண்டும். இந்த கருத்தை நிராகரித்து பிரச்சினையை இந்த அளவு தீவிரமாக செய்தது..வேறு யார்? நம்ம காந்தி தாத்தாதான் சத்தியத்துடன் பரிசோதனை செய்வதோடு நிறுத்தி இருக்கலாம்..ஆனால் மனிதர் ஹிந்துக்கள் நலனோடு பரிசோதனை செய்ய இறங்கியதுதான் வரலாற்று சோதனையாக முடிந்தது. பாகிஸ்தானிகளுக்காக மங்கு மாங்கென்று உழைத்த அவர் இறந்தபோது அவரது அஸ்தி கலசம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது போலவே பாகிஸ்தானுக்கும் அந்த அரசு வேண்டுகோள் விடுக்காமலேயே அனுப்பப்பட்டது. ஆனால் காந்தி ஹிந்து இந்தியாவின் தலைவர் எங்களுக்கும் அவருக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு கலசத்தை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டது என்பது பலரும் அறியாத தகவல். சங்கி என்று என்னை திட்டி கருத்துப்பதிவு செய்கிறவர்களை வரவேற்கிறேன்.


Mahendran TC
ஜன 30, 2024 16:41

மிகவும் வரவேற்கத்தக்க சட்டம்


venugopal s
ஜன 30, 2024 15:11

நாட்டின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை இருந்திருந்தால் இந்த சட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும்.திடீரென இப்போது அக்கறை காண்பிப்பது தேர்தல் வாக்கு வங்கி அரசியல்!


Vaduvooraan
ஜன 30, 2024 19:16

Better late than never


குமரி குருவி
ஜன 30, 2024 13:36

எதிர்கட்சிகளின் முகத்திரையை கிழிக்க குடியுரிமை திருத்த சட்டம்


சிந்தனை
ஜன 30, 2024 13:23

இது போன்ற முடிவுகள் பாஜகவால் தன் இஷ்டத்திற்கு எடுக்கப்படுவது இல்லை, என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ராணுவம் தன்னுடைய பரிந்துரையை செய்கிறது. அதற்கு, ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள், நிகழ்ச்சிகள், இவைகளின் தரவுகளின் அடிப்படையில் அந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பாஜக அரசு மத்திய அரசு இந்த முடிவை எடுக்கிறது. இதை அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நேர்மை உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நாட்டுப்பற்று உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.


பாரதி
ஜன 30, 2024 13:03

சி ஏ ஏ சட்டம் நாட்டுக்கு நல்லது இல்லை என்றால் மக்கள் தாமாகவே பாஜகவை தோற்கடிக்க போகிறார்கள். இதில் அரசியல் நாடகம், தேர்தலுக்காக நாடகம் என்பதற்கு வேலை என்ன? முட்டாள்கள் தான் இப்படி உளர முடியும்!!


Rajah
ஜன 30, 2024 12:05

இந்த உலகத்தில் உள்ள அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் கொள்கை. அதற்ககாக எதுவும் செய்வார்கள். ஆகவே முஸ்லிம்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதில் வியப்பில்லை. ஆனால் இதை எதிர்க்கும் ஏனைய முட்டாள்களை என்னவென்று சொல்வது? வாக்கு வங்கிக்காக நாட்டையே சுடுகாடாக மாற்ற தயங்காதவர்களை மனிதர்கள் என்று சொல்வதற்கே நா கூசுகின்றது. கேவலத்திலும் கேவலமான மனித வேடத்தில் அலையும் மிருகங்கள்.


Yaro Oruvan
ஜன 30, 2024 11:57

இந்திய முஸ்லீம் மக்கள் எதற்காக இந்த சட்டத்தை பாத்து பயப்பட வேண்டும்?? அவர்களுக்கு எந்த மாற்றமும் இந்த சட்டத்தில் இல்லை.. வந்தேறிகளின் ஊட்டு வங்கிக்காக மம்தா கூவுகிறார். சிறுபான்மை ஒட்டு வங்கி என்று ஒன்று உருவாக்கி வெற்றிநடை போட்டு நாட்டை கெடுக்கும் கும்பலுக்கு உதவும்போது பெரும்பான்மை ஒட்டு வங்கி ஏற்படுவது காலத்தின் கட்டாயம்.. அதில் தவறே இல்லை.. மதச்சாற்பற்ற நாட்டில் எப்படி சிறுபான்மை வந்தது? அப்படின்னா பெரும்பான்மை ஒட்டு வங்கியும் வந்தே தீரும்.. ஜைஹிந்..


Sathyam
ஜன 30, 2024 11:36

UCC/CAA is the need of hour. come what may GOI has to this bill earliest and already many HC/SC has endorsed and have given green signal. It is very much desired so that there is uniformity as far as civil or criminal code is concerned. There cannot be any law specially based on religious book or code and framework on the same needs to be drafted at the earliest. Government must ensure that they need to communicate with proper clarification to the stakeholders about the advantage of this Uniform civil code. I also suggest the name of this Bill as Bharatn Civil Code as we already have Bharatn Penal Code. I am very much sure that Islamist radicals will come to streets will engage in all type of riots/violence and they will be joined with communists left liberals, Bollywood gang, toolkit gang fake farmers Salim Yadav, Rakesh Dacoit, many others. GOI must take shrewd iron hand to implement it at central level and not leave it to states as they will only look at their vote banks and ensure that it is suppressed. GOI should be ready with Paramilitary forces and other security agencies IB to anticipate trouble areas and deploy more forces to curb this rogue mob and ensure that they are armed with high legal team of highly skilled lawyers to argue with highest level to purse all the cases and ensure that the logic is won, and the law is enforced. GOI also must ensure that no foreign forces or nation interfere or comment on this and warn them of severe consequences and even to go to break the diplomatic relationship withdraw the security of their agencies. I am sure more panic would be Mulla's/Maulvis/AIMPLB/WAQF Board which needs to be under radar and must be suppressed with iron hand if they instigate or provoke violence like CAA.


duruvasar
ஜன 30, 2024 10:45

எதிர்ப்பு தெரிவிக்கும் டெங்கு கொசுக்க ளை எப்படி கையாளவேண்டும் என்பதை அமித்ஷாவுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ