உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல்கலைகள் பயன்படுத்தாத ரூ.1,769 கோடி; வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டது கேரளா அரசு!

பல்கலைகள் பயன்படுத்தாத ரூ.1,769 கோடி; வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டது கேரளா அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து, கேரள அரசு கருவூலத்திற்கு ரூ.1,769 கோடியை பல்கலைக்கழங்கள் அனுப்பியுள்ளன. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, நிதியாண்டின் இறுதியில் செலவுகளை ஈடுசெய்வதற்காக நிதியில்லாமல் திணறி வருகிறது. மார்ச் 31ம் தேதி வரையில் சுமார் ரூ.30,000 கோடி அரசுக்கு தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு துறைகளில் இருந்து வரவேண்டிய தொகைகளை வசூலிக்கும் முயற்சியில் அம்மாநில நிதியமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. அரசு நிதி எங்கெங்கெல்லாம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்பதை கண்டறியவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களின் கணக்கில் பல நூறு கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக நிதியை அரசு கணக்கில் சேர்க்கும்படி பல்கலை நிர்வாகத்தினருக்கு அரசு உத்தரவிட்டது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் பணத்தை செலுத்த தயங்கின. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, பல்கலை அதிகாரிகள் அரசு கூறியதை ஏற்றுக்கொண்டனர்.தற்போது வரை கேரளாவில் உள்ள 7 பல்கலைக்கழகங்கள் ரூ.1,769 கோடியை அரசு கரூவூலத்திற்கு பணத்தை அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Tetra
மார் 04, 2025 11:51

இதுவல்லவோ அரசு. கஜானா காலியா எடுகோவில் பணம், இப்போ எடு கல்விப் பணம். அரசு நடக்க வேண்டாமா?


C.SRIRAM
மார் 03, 2025 22:01

பல்கலை நிதி என்றால் மத்திய பல்கலை மானிய குழு கொடுத்தது என்றால் மத்திய அரசு அதை கேட்கும் உரிமை உண்டு . மாநில அரசு செய்தது முறைகேடு


S. Venugopal
மார் 03, 2025 21:26

நமது நாட்டில் பல்கலைக் கழகங்களுக்கும் மற்றும் உயர் கல்வி நிலையங்களுக்கும் ஒதுக்கப்படும் தொகையினை பெரும்பாலும் எல்லா கல்விக் கழகங்களும் வளர்ச்சித்திட்டங்களுக்குப் பயன் படுத்தாமல் ஓவ்வொரு ஆண்டும் மிகவும் ஆதிக்கப்படியான தொகையினை மீதம் வைக்கின்றன. மேலும் திட்டம்களையும் குறிப்பிட்ட காலங்களில் முடிக்காமால் மிகவும் தாமதாக திட்டங்கள் முடிக்கப்படுகின்றன. இந்த தாமதத்தினால் திட்டங்களை முடிக்க அதிக அளவில் மேலும் பணம் தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம்கள் அவர்களுக்கு கல்விகற்ப்பித்தலில் அதிக அளவு வேலைப் பளு உள்ளது மேலும் கல்வியாளர்களுக்கு உதவி புரியத் துணை அலுவலர்கள் பற்றாக்குறை. இதற்காக பி டபிள்யு டி அல்லது சி பி டபிள்யு டி இல் கல்வி கழகங்களுக்கான கட்டுமான பணிகளை செயல் படுத்த ஒரு சிறப்பு பிரிவினை ஏற்படுத்தி அவர்களிடம் கல்விக்கழகங்களின் கட்டுமானப் பணிகளை ஒப்படைத்தால் நன்று.


Tetra
மார் 04, 2025 11:55

தரமில்லாத மாணவர்களை வைத்து எந்த திட்டத்தை அமல்படுத்துவது. மாணவர்களுக்கு முதலில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கற்பித்தால் மாணவன் வளர்ச்சி அடைந்து பல்கலை கழகமும் மேம்படும்


M Ramachandran
மார் 03, 2025 19:19

திருட்டில் என்ன ஒற்றுமையை திருட்டு திராவிடமும் செஞ்சட்டையும். இண்டி கூட்டணி கட்சிகள் நாற்றம் எடுக்குது. கையடாடல் என்பது இப்படி தான் ஆர்மபிக்கிறது. அரசு கஜானா குடும்ப காஜனமாக நம் தமிழகம் சிரக்கிறது.


kalyan
மார் 03, 2025 18:43

பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட நிதியை மாநில அரசின் செலவுகளுக்கு திசை திருப்பியதன் பெயரில் வரும் ஆண்டு திசை திருப்பிய தொகையை பல்கலைக்கழக நிதி ஒதுக்கீட்டிலிருந்து குறைத்து மீதியை மட்டும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய சரசு வழங்கினால் திசை திருப்பியவர்கள் சம்பளம் மற்றும் மற்ற செலவுகளுக்கு மாநிலஅரசைக்கெஞ்ச வேண்டி வரும். அப்போதும் மாநில அரசிடம் பணம் இல்லையென்றால் திசை திருப்பியவர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழிலாளர்கள் நிலை தத்திங்கிணைத்தோம்


Tetra
மார் 04, 2025 11:56

அருமை


ஆரூர் ரங்
மார் 03, 2025 18:42

கேரள மக்கள் படித்த வசதியானவர்கள். ஆனா கேரள அரசு யாசகம் எடுக்கும் நிலைமையில் இருப்பது வினோதமானது.


புதிய வீடியோ