உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் கார் மீது லாரி மோதியது; டாக்டர்கள் 5 பேர் பரிதாப பலி

உ.பி.,யில் கார் மீது லாரி மோதியது; டாக்டர்கள் 5 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில், டாக்டர்கள் 5 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில், அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி தடுமாறியது. அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 டாக்டர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர்கள். லக்னோவில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 21:27

சாலை விதிகள் , குறைவான தூக்கம் எதனை தான் சொல்லுவது


S Srinivasan
நவ 27, 2024 15:05

too much speed, if you are sleepy pl stop the car in safe place and sleep. in scorpion car even you go at 180kmph you will not feel you are going at that speed, but accident happens it will be gruesome


N Annamalai
நவ 27, 2024 14:38

அதி வேகம் .வேக கட்டுப்பாட்டுக்கு கருவி பெரிய வாகங்களுக்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் தேவை .


MARI KUMAR
நவ 27, 2024 14:24

ஆழ்ந்த இரங்கல்


வைகுண்டேஸ்வரன்
நவ 27, 2024 14:17

மிகவும் பரிதாபகரமான செய்தி. ஓட்டியவர் உறங்கி இருப்பார்.


Padmasridharan
நவ 27, 2024 14:11

RiP?? உண்மையாக வேலை செய்யும் இந்திய மருத்துவர்களுக்கு ஏன் இப்படி ஆகின்றது இப்பொழுதெல்லாம் ? மருத்துவமனைக்கு உள்ளயேயும் வெளியேயும். நிறைய வாகனங்கள் Easy license மற்றும் குடி மகன்கள் substance abuse, லஞ்சம் வாங்கும் corruption அரசு அதிகாரிகள்


முக்கிய வீடியோ