உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு : தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்

நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு : தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டினால் மிகப்பெரும் பலன் கிடைத்துள்ளது. 7.50 லட்சம் வழக்குகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரிக்கப்பட்டன. 1.50 லட்சம் வழக்குகள், 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யப்பட்டன. என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.உலகின் பெரும் பொருளாதார நாடுகளின், ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பை, தென் அமெரிக்க நாடான பிரேசில் இந்தாண்டு ஏற்றுள்ளது. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இடையேயான ஜே - 20 சந்திப்பு கூட்டம் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்றார்.அதில் அவர் பேசியதாவது:டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துவது, நீதித் துறை செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளது. இது பலதரப்புக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கொரோனா பரவலின்போது, ஆன்லைன் வாயிலாக விசாரணை துவங்கியது. தற்போது நீதிமன்றங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டாலும், வீடியோ கான்பரன்ஸ் வசதியும் பயன்படுத்துகிறோம்.இந்தியாவில் இதுவரை, 7.50 லட்சம் வழக்குகளை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரித்துள்ளோம்.இதுவரை, 1.5 லட்சம் வழக்குகள் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் காகிதங்கள் பயன்பாட்டை குறைத்துள்ளோம்.. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆரூர் ரங்
மே 16, 2024 15:13

ஊழல் பொன்முடியையும் பெரியசாமியையும் விடுதலை செய்ய எந்த டெக்னாலஜியும் வேண்டாமே.


ராம்
மே 16, 2024 14:51

பழைய பெருமை: ஆளே இல்லாத கார் தானாக பிளாட்பாரத்துல தூங்கினு இருந்தவங்களை கொன்றுச்சு. புதிய பெருமை: அமைச்சருக்கு வயசாகிடுச்சு so IPL மாட்சு பாக்காலம் but செஞ்ச தப்புக்கு தண்டனை கூடாது.


Kalyanaraman
மே 15, 2024 23:34

எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும் "வாய்தா" சட்டங்களால் - வருடங்களுக்கு வழக்குகள் இழுத்துக்கொண்டு போவதை தவிர்க்க முடியுமா? மார்கெட்டை விட மோசமான ஜன நெரிசலை சமாளிக்க முடியுமா?


jayaraman
மே 15, 2024 21:57

முதலில் biometric attendance செயல் படுத்துங்கள் British style கோடை விடுமுறையை ரத்து செய்யுங்கள் வருடத்திற்கு மேல் வழக்கை இழுத்தடிக்காதீர்கள் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே நீதிமன்றம், வீட்டில் ஒரு வேலையும் இல்லாமல் இருப்பவர்களால் தான் ஒரு கேஸ்ஸை follow செய்து நடத்த முடியும் என்ற நிலைமையை மாற்றுங்கள்


GMM
மே 15, 2024 21:22

நீதிமன்றம் ஒரு தபால் நிலையம் போல் செயல்படுகிறது இது மாற வேண்டும் வழக்கில் வழக்கறிஞர் தவிர யாரும் நேரடியாக எந்த தகவலும் தெரிவிக்க முடியாது எந்த அரசு துறையிலும் இந்த முறை இல்லை கட்டு அரசு கோப்பு போல் பராமரிப்பு இல்லை தொழில் நுட்பம் மூலம் வழக்கை விரைவில் முடிக்க முடியும் வழக்கறிஞர் பலர் மெயில் முகவரி கட்டாயம் தெரிவிக்க வேண்டும் வங்கி மூலம் மட்டும் சேவை கட்டணம் பெற வேண்டும் தன் கட்சிக்காரருக்கு ஓரிரு நாட்களில் வழக்கின் தகவல் கொடுக்க வேண்டும் கட்சிக்காரர் பார் கவுன்சிலுக்கு நகல் அனுப்ப அனுமதி வேண்டும் அரசு அதிகாரிகள் நேரிடையாக நிர்வாக விவரம் தெரிவிக்க அனுமதி வேண்டும் ஏதும் நடைமுறையில் இல்லை அதிக குறைபாடு உள்ள துறை நீதித்துறை


Tamilnesan
மே 15, 2024 21:17

இந்தியாவில் நீதி துறை முற்றிலும் சீர்குலைந்து விட்டது இங்கு நான்கு விதமான சட்டங்கள் உள்ளன அரசியல்வியாதி, தொழிலதிபர், சினிமாக்காரர்கள் மற்றும் பொது மக்களுக்கு என்று தனி சட்டங்கள் உள்ளன பத்து ரூபாய் பசிப்பிணிக்காக திருடிய பொது மக்களை இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்க உத்தரவிடும் அநீதி மன்றம், பத்து லக்ஷம் கோடிகள் மக்கள் வரி பணத்தை திருடிய அரசியல்வியாதியை பாதுகாக்கின்றது ஏனென்றால் திமுகாவின் ஆரெஸ் பாரதி சொன்னது போல, ஒன்றுமில்லாத ஆட்களை நீதிபதிகள் ஆக்கியது திமுகா அதற்கு நன்றி கடனாக நீதிபதிகள் அரசியல்வியாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கிறார்கள் தமிழ்நாட்டில் சுதந்திரம் அடைந்த நாள் முதற்கொண்டு இரண்டு கட்சிகளும் மாறி மாறி பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடித்து வருகிறார்கள் ஒரு அரசியல்வியாதி இது வரை ஜெயிலுக்கு போயி இருக்கிறார்களா ? எனவே, அநீதி மன்றங்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டது என்பதே கசப்பான உண்மை


மோகனசுந்தரம்
மே 16, 2024 06:19

தமிழ் நேசன் சார் உங்கள் கருத்து அருமையிலும் அருமை. நன்றி வாழ்த்துக்கள்.


jss
மே 16, 2024 17:36

அருமையான பதிவு. நிஜத்தை மைக் போட்டு கூறிவிட்டீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து தெளிந்தால் சரி


தாமரை மலர்கிறது
மே 15, 2024 20:58

குற்றவாளிகளை ஒவ்வொருவராக விடுவிக்கும் நீதித்துறையை தேர்தல் முடிந்தவுடன் மத்திய அரசு சீரமைக்கும்


Suppan
மே 15, 2024 20:52

ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன பசி, ராகுல், சோனியா போன்றோர் வாய்தா வாங்கியே காலத்தைத் தள்ளுகின்றனர் இதற்கெல்லாம் என்ன தீர்வு? பல வேறு தொழில் நுட்பங்கள் உதவிக்கு உள்ளன அவைகளை எப்பொழுது பயன்படுத்த ஆரம்பிப்பீர்கள்?


கோர்ட் கோவிந்தன்
மே 15, 2024 20:47

நேத்திக்கி தமிழகத்தில்.ஒரு அரசியல்வாதி அவதூறு வழக்கில் ஆஜராக வந்தாராம். ஆஜரான உடனே அந்தக் கேசை அடுத்த மாதம் 27 தேதிக்கு ஒத்தி வெச்சுட்டாங்க. தொழில்நுட்பம் தாண்டவமாடுது.


Nagarajan D
மே 15, 2024 20:45

இதெல்லாம் என்ன பெரிய விஷயம் எத்தனை ஜாமீன் கொடுத்தோம் எத்தனை குற்றவாளிகளை விடுதலை செய்தோம் எதனை வழுக்குகளுக்கு வாய்தா கொடுத்தோம் அதையும் சொன்னால் சரியாக இருக்கும்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை