உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கந்துவட்டி கொடுமை வியாபாரி தற்கொலை முயற்சி 

கந்துவட்டி கொடுமை வியாபாரி தற்கொலை முயற்சி 

துமகூரு : துமகூரில் கந்துவட்டி கொடுமையால், வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.துமகூரு நசராபாத் லே - அவுட்டில் வசிப்பவர் ஆசம் பாஷா, 35; பழ வியாபாரி. இவர், கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் இருந்து வட்டிக்கு கடன் வாங்கினார். ஆனால், வட்டி, கடனை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், பணம் கொடுத்தவர் அதிக வட்டி கேட்டு, ஆசம் பாஷாவை தொந்தரவு செய்து உள்ளார்.மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். அதற்கு முன்பு கந்துவட்டிக்காரர் கொடுமையால், தற்கொலை செய்வதாக, மொபைல் போனில் வீடியோ எடுத்து பேசி இருந்தார்.ஆசம் பாஷாவை குடும்பத்தினர் மீட்டு, துமகூரு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலக் பார்க் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், துமகூரில் அதிக வட்டி கேட்கும் கந்துவட்டிக்காரர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க நினைப்பவர்கள், 9480802900 என்ற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று, எஸ்.பி., அசோக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை