உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்னி பஸ்- கார் மோதி விபத்து: தீப்பற்றியதில் 5 பேர் பலி

ஆம்னி பஸ்- கார் மோதி விபத்து: தீப்பற்றியதில் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி மாநிலத்தில் ஆம்னி பஸ் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ராவில் இருந்து நொய்டாவிற்கு பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது.ஆம்னி பஸ்சின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. பின்னால் வந்த கார் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் மற்றும் கார் தீப்பற்றி எரிந்தது.இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். காரில் இருந்த 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
பிப் 12, 2024 17:24

போய்ச்சேர்ந்தாலும் சூப்பர் ஸ்பீடில் போகணும். நாம ஒழுங்காப்.போனாலும் அடுத்தவன் தாறுமாறா ஓட்டி நம்மளை அனுப்பி வெச்சுருவான். எட்டுவழி எக்ஸ்பிரஸ் சாலை. நாட்டுக்கு அர்ப்பணிப்பு.


Sathyasekaren Sathyanarayanana
பிப் 12, 2024 23:21

கொத்தடிமாய் அப்பு, அப்ப சாலையில் செல்லாதே.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை