உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி...! தண்டவாளத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி...! தண்டவாளத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்பூர்: ஜோத்பூர் அருகே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அகமதாபாத் நகரத்தில் இருந்து ஜோத்பூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 375 பயணிகளுடன் புறப்பட்டது. அதி வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது ஜவாய் பண்ட் மற்றும் பைரோலியா ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பகுதியில் டமால் என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் மீது மோதியது.சத்தம் கேட்டு குழப்பம் அடைந்த ஓட்டுநர்கள் இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ரயில் என்ஜின் முன்பகுதியில் சேதம் அடைந்ததாகவும் கூறி உள்ளனர். இதனால் 7 நிமிடங்கள் தாமதமாக ரயில் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட ரயில்வே தண்டவாள பகுதியில் ரயில்வே ஊழியர்கள் சோதனையில் இறங்கிய போது, அங்கு உடைந்த சிமென்ட் பலகை இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்.திட்டமிட்டே, ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்டு இருப்பதை அவர்கள் உணர்ந்து. இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட ரயில்நிலைய மேலாளர் மற்றும் உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.உடனடியாக அனைத்தையும் ஆய்வு செய்த உயரதிகாரிகள், தண்டவாளத்தை கவிழ்க்க சதி நடந்திருப்பதை உறுதி செய்து, மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர். மிகப்பெரும் சதி வேலைக்கு திட்டமிட்டு தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்டு உள்ளதால் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Iniyan
செப் 09, 2024 21:57

காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் சற்று பலம் பெற்றபின் இந்தமாதிரி சம்பவங்கள் நிறைய நடப்பது வாடிக்கை ஆகி விட்டது. காங்கிரஸ் கூட்டணி கட்சி மீது சற்றும் கருணை அற்ற நடவடிக்கை தேவை. அது சில முக்கிய தலைகளின் களை எடுப்பாக இருக்க வேண்டும் .


Ramaswamy
ஆக 28, 2024 13:56

Police and intelligence agencies should act very quickly to nab the culprite. They should be shot dead before the matter take political twist for which our Country is very prominent. At least show them killed in ENCOUNTER before the matter go to court. This is India, culprit can escape from punishment at any time. Jai Bharat Mataki ??????


shakti
ஆக 27, 2024 19:59

வேறு யார் ?? "மர்ம நபர்கள்" தான் ...


R Sriram
ஆக 27, 2024 18:07

ஆப்போஸிஷன் நேஷனல் அல்லது regional கட்சிகள் தான் காரணம்.


Barakat Ali
ஆக 27, 2024 14:01

யாராக இருந்தாலும் அந்த தேசவிரோதிகளைக் களைய மத்திய அரசு யோசிக்கக் கூடாது ....


Sankara Subramaniam
ஆக 27, 2024 13:56

Stringent punishment should be given


நிக்கோல்தாம்சன்
ஆக 27, 2024 13:17

INDI கூட்டணியில் உள்ள மர்ம நபர்களுக்கு நன்கு தெரியும் இதை செய்வது யாரென்று


K Subramanian
ஆக 27, 2024 13:05

Public hanging of the bastards will be the only fit punishment.


ponssasi
ஆக 27, 2024 13:02

இவர்களை கைதுசெய்து சிறையில் தள்ளவேண்டும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஜாமீன் மறுக்கப்பட்டு தண்டனை மட்டுமே கொடுக்கவேண்டும். இவர்களை ஜீமீன் எடுக்கவரும் வழக்கறிஜரை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பார் கவுன்சில் வழக்கறிஜராக பணியாற்ற தடைவிதிக்கவேண்டும். இந்த கொடிய தண்டனை கொடுக்கவில்லை எனில் மேலும் சிலர் இதைப்போல செய்ய துணைவர்.


N.Purushothaman
ஆக 27, 2024 12:58

மத்திய பா. ஜ அரசு எதிர்கட்சிகள் மீது மென்மையான போக்கை கையாள்வது கவலைக்குரியது .....ஒரு பக்கம் மதக்கலவரம் ஏற்படுத்த ஒரு கும்பலும் , இன்னொரு பக்கம் தீவிரவாத பயிற்சிகள் எடுத்து நாட்டில் தாக்குதல் நடத்தவும் மற்றோரு பக்கத்தில் செயற்கை போதை பொருள் கடத்தல், விநியோகம் அதன் மூலம் வரும் பணம் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தவும் இதனுடன் சர்வதேச எதிரி நாடுகள், எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் ,அந்நிய சக்தி தொழிலதிபர்களை ஏவுதல் , காலிஸ்தான் தீவிரவாதத்த வேகப்படுத்துதல் ,உள்நாட்டில் நக்சல் என பலமுனை தாக்குதல்களையும் எல்லையில் நேரடியாக தீவிரவாதிகளை ஏவிவிடுதல் என அனைத்தையும் அரங்கேற்றுகிறார்கள் ... இவர்களுக்கு துணை போகும் எந்த ஒரு அரசியல் கட்சியையும் அரசியல் வியாதியும் சும்மா விடக்கூடாது ....இல்லையெனில் இவர்கள் உள்நாட்டில் இருந்து கொண்டே பெரும் அச்சறுத்தலாக மாறுவார்கள் ....


முக்கிய வீடியோ