உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ; உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.கோரக்பூரில் ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (நவ.10) நடைபெற்றது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது; பாரத மாதா மீதும், தாய்நாட்டின் மீதும் மக்களிடையே மரியாதை, ஒற்றுமை மற்றும் பெருமையை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். வந்தே மாதரத்தை பாடுவது நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை நினைவூட்டுவதாக உள்ளது. மேலும் மாணவர்கள் இடையே தேசப்பக்தியை வலுப்படுத்துவாகவும் இருக்கும். இந்த பாடலின் மீது மரியாதை உணர்வு நமக்கு இருக்க வேண்டும். உ.பி.யில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பாரத மாதாவின் மீது மரியாதை உணர்வை பிரதிபலிக்கும் வகையில், இங்குள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாடுவதை கட்டாயமாக்குவோம்.இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

MARUTHU PANDIAR
நவ 10, 2025 17:20

இதெல்லாம் சட்டசபை தேர்தலில் வென்றதற்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம். சாமான்யனுக்கான மேட்டர்களை பற்றி மட்டுமே அது வரை பேசுங்கள். தெர்மல் வியூகங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா சுமையையும் பிரதமர் மீது போடாதீர்கள்.


தமிழ்வேள்
நவ 10, 2025 17:18

ஐயா , இந்த வீணாய்ப்போன டுமீல் நாட்டை , உதைத்து வழிக்கு கொண்டுவர உங்களால் மட்டுமே முடியும் ...தயவு செய்து வாருங்கள் ..திராவிட சேட்டை தாங்க முடியவில்லை ..தேசத்துரோகம் , ஹிந்து விரோதம் தலைவிரித்து ஆடுகிறது ..


V Venkatachalam, Chennai-87
நவ 10, 2025 17:15

யோகிஜி. உங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட். தேசப்பற்று மிகுந்த ஒரு வீர புருஷர். வந்தே மாதரம். வந்தே மாதரம். வந்தே மாதரம். இந்த சல்யூட்டில் தினமலருக்கும் பங்கு உண்டு.


RAMESH KUMAR R V
நவ 10, 2025 17:03

இந்திய கட்டமைப்பை தேசபக்தி என்ற கூடாரத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். மீறுபவர்களை தேசத்துரோக வழக்கில் கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் அதற்கான சட்டம் தேவை. ஜெய் ஹிந்தி.


KOVAIKARAN
நவ 10, 2025 16:22

தேச பக்தர்.


Krishnan G
நவ 10, 2025 16:22

சபாஷ்... நல்லதொரு தொடக்கம்... வாழ்த்துக்கள் யோகி அவர்களே.... ஜெய் ஹிந்த்


சமீபத்திய செய்தி