மேலும் செய்திகள்
பீஹார் அரசியலில் நிதிஷ் வாரிசு: ஜேடியு செயல் தலைவர் கணிப்பு
2 hour(s) ago | 4
நேருவை இழிவுபடுத்துவதே பாஜ அரசின் நோக்கம்; சோனியா குற்றச்சாட்டு
3 hour(s) ago | 6
ஆமதாபாத்: இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் செயல்திறன் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழாவின் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இல்லையென்றால், இன்று நாம் இருக்கும் இந்தியாவை பார்த்திருக்க மாட்டோம். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் நிறைவு விழாவில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மரியாதை மற்றும் பெருமைக்குரிய தருணம். பாரதத்திற்கு அடித்தளம் அமைத்த சர்தார் படேலுக்கு, இந்தியா எப்போதும் கடமைப்பட்டிருக்கும். பிரதமர் மோடியின் தலைமையில் சர்தார் படேலின் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை நனவாகி வருகிறது.இந்தியாவின் பாதுகாப்புத்துறையின் செயல்திறன் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தேசத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் தருணம் ஆகும். இவ்வாறு சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார். மரியாதை
முன்னதாக, சர்தார் வல்லபாய் படேல் சிலை மற்றும் திருவுருவ படத்துக்கு, சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2 hour(s) ago | 4
3 hour(s) ago | 6