உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்

வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி பேசினார். இப்பிரச்னையில் சிக்கிய 1,800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் குறித்து அவர் குறிப்பிட்டார்.வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்து வருகிறது. அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். 408 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இது எப்படி பிரச்னைக்கு உள்ளானது? இக்கிராம மக்கள், தங்களுக்குள் நிலங்களை வாங்கும் போதும், விற்பனை செய்யும்போதும், வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என அவர்களிடம் தெளிவாக கூறப்பட்டது.டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, மாவட்ட கலெக்டர் தவறான தகவல்களை பதிவு செய்ததால், முழுகிராமமும் தவறான பதிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமவாசியும் தனது நிலம் தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டுமா?விஷயம் உண்மையாக இருந்தும், அதிகாரி தவறாக பதிவு செய்ததால், கிராம மக்கள் ஏன் அங்கு வருகிறார்கள், தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வக்ப் வாரியத்தால் கூற முடியாதா?ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும்போதும், அந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறிக் கொண்டே இருந்தார்கள். கோவிலின் நிலை என்ன? வக்ப் வாரியத்தால் கோவில் கட்டப்பட்டதா? இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.கடந்த 2022ம் ஆண்டு திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் முழுதும் தமிழக வக்ப் வாரியம் தனக்கு சொந்தமானது எனக் கூறியது பிரச்னை ஆனது. இது குறித்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், கிராம மக்கள், வக்ப் வாரிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Thiyagarajan S
ஏப் 09, 2025 23:00

பிரதமர் அவர்களே போதும் போதும் இந்த அம்மா 10 வருஷமா ஒரே துறையில் இருக்குது இது மாத்துங்க... இதனுடைய துறையில் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை மக்களைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காத பெண்மணி இவர்.... மக்கள் தொடும் கஷ்டம் இவருக்கு தெரிவதில்லை ஏனென்றால் இவர் தொகுதிக்கு சென்று இதுவரை வாக்கு கேட்டதே இல்லை அனைத்து முறையில் ராஜசபாவிலேயே ஜெயித்து வந்து மந்திரியாகி விடுகிறார் அதனால் மக்கள் கஷ்டமும் புரிவதில்லை மக்களிடம் செல்லும் கட்சியினரில் கஷ்டமும் புரிவதில்லை இந்த அம்மாவின் செயலால் பொதுமக்களை சந்திக்க பாஜகவினருக்கு மிகவும் சங்கட ஏற்படுகிறது எனவே பிரதமர அவர்களே தயவு செய்து இந்த அம்மாவை பொதுமக்கள் தொடர்பில்லாத ஒரு துறைக்கு மாற்றி போடுங்கள் மிகவும் புண்ணியமாக இருக்கும்....


Lakshmanan Veerappan
ஏப் 09, 2025 12:44

இந்த நிகழ்வு வக்ப் வாரிய சட்ட திருத்தத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இல்லாவிடில் இப்படிப்பட்ட சட்டத்திற்கு இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ


Nalini Vijayakumar
ஏப் 07, 2025 20:31

அடுத்தவர்கள் இடத்தை அபகரித்துக் கொண்டு உரிமை கொண்டாடுவதர்க்கு வெட்கமாக இல்லை?


Nalini Vijayakumar
ஏப் 07, 2025 20:29

அடுத்தவர்களுக்கு சொந்தமான இடங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டு என் சொத்து என்று சொல்ல வெட்கமாக இல்லை?


மணி Muthaiahpillai
ஏப் 05, 2025 21:29

அந்த காலத்து மன்னர்கள் சொத்துக்கள்தான் ஜமீன்களுடையதுதான் ஆங்கிலம் தெரியாது


Rasheel
ஏப் 05, 2025 16:34

கேள்வி கேட்பவனை செகுலர் என்ற போர்வையில் வாயை அடைக்கிறார்கள்


Ram
ஏப் 05, 2025 12:06

முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சொத்து எப்படிவந்தது


murthy c k
ஏப் 05, 2025 10:49

இப்படி பேச கேவலமா இல்ல ,எத்தனை மக்கள் ,முஸ்லீம் மக்களும் இதில் அடக்கம் இதனால் மகிழ்ச்சியாக உள்ளார்கள்


vbs manian
ஏப் 05, 2025 09:31

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதை போன்று பல மாநிலங்களில் உள்ளன. சம்பல் பள்ளத்தாக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களுக்குள். ஹனுமான் ராமர் சிலைகள் கண் டெடுக்கப்பட்டன. ஏன் தாஜ்மஹால் மீது கூட ஐயம் உள்ளது. அந்த கட்டுமானம் தேஜோமஹால் என்ற கோவில் மீது உள்ளது என்று கருத்துக்கள் உள்ளன.


Kasim Mohamed
ஏப் 05, 2025 02:39

அக்கால அரச பரம்பரைகல் தாங்கல் அறிய ஆவள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை