உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வினேஷ் போகத் தகுதி நீக்கம்: ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு

பாரிஸ்: வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த மேல்முறையீடு மீது ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு எடுக்கப்படும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, முதல் சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறினார். பைனலில் இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், சர்வதேச மல்யுத்த சங்கம் தகுதி நீக்கம் செய்தது. தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து கோர்ட் ஆர்பிட்ரேசன் ஆப் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

naranam
ஆக 09, 2024 19:52

சும்மா இதே ஒப்பாரியா போச்சு! விளையாட்டு விதிகளின் படி தானே தகுதி நீக்கம் செய்தனர். பிறகு ஏன் இந்தக் கண்ணீர்? பெருந்தன்மையோடு தவறை ஒத்துக் கொண்டு அடுத்த நடவடிக்கையை பாப்பியா!


தாமரை மலர்கிறது
ஆக 09, 2024 19:04

விளையாட வந்த இடத்தில நல்லா தின்னு உடம்ப ஏத்திட்டு, முடிய வெட்டினா, வெயிட் குறைஞ்சிடுமா? தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான். ஐம்பது கிலோ போட்டிக்கு, ஐம்பத்திமூணு கிலோ உள்ள நபரை எப்படி ஒலிம்பிக் அனுமதிக்கும்? கோட்டாவில் வெள்ளி பதக்கம் கொடுக்க, ஒலிம்பிக் போட்டி நடத்துவது இந்திய அரசு அல்ல.


sridhar
ஆக 09, 2024 17:46

ஐயா அவங்க தலை முடியை கொஞ்சம் கம்மி பண்ணியிருந்தாலே தப்பி ருக்க வாய்ப்பிருக்குமோ


Kasimani Baskaran
ஆக 09, 2024 16:20

நம்ம ஊர் கோர்ட்டை விட வேகமாக செயல்படுவது மட்டில்லா மகிழ்ச்சி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை