உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான விபத்து விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்; பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்

விமான விபத்து விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்; பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், நாங்கள் உண்மையின் பக்கம் இருக்க விரும்புகிறோம் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.ராஜ்ய சபாவில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியதாவது; கடந்த மாதம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள விவரங்களை சேகரிப்பதில் விமான விபத்து புலனாய்வு பணியகம் மும்முரமாக இருக்கிறது. சர்வதேச விமான போக்குவரத்து நெறிமுறைகளுக்கு உட்பட்டு விசாரணை நடக்கிறது. பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம். வேறு எதற்கும் அல்ல. விபத்தில் சரியாக என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறோம். இறுதி விசாரணை அறிக்கைக்கு பின்னரே அதன் விவரங்கள் வெளிவரும். இவ்வாறு அமைச்சர் ராம்மோகன் நாயுடு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 22, 2025 01:00

உண்மை எந்தப் பக்கம் இருக்கு?


அப்பாவி
ஜூலை 21, 2025 17:20

அரசியல்வாதிகளுக்கும் உண்மைக்கும் கொஞ்சதூரம் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை