உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ? ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்

ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ? ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆஜ்மீர் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜ்மீர் தர்கா என்பது பிரசித்தி பெற்ற சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்களின் அடக்கத்தலம் (மக்பரா) ஆகும். இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இந்நிலையில் இங்கு சிவன் கோயில் இருப்பதாகவும் அந்த இடத்தை ஆய்வு செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவில் 1911-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்விலாஸ் ஷர்தா என்பவர் எழுதிய புத்தகத்தில் புலந்த் தர்வாசா உட்பட அஜ்மீர் தர்காவைச் சுற்றி இந்து சிற்பங்கள் மற்றும் உருவப்படங்கள் தெரியும் என மேற்கோள் காட்டப்பட்டது.இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி இந்திய தொல்லியல்துறை , ஆஜ்மீர் தர்கா கமிட்டி ,சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிச. 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

P. SRINIVASALU
நவ 28, 2024 10:07

இந்த நாடு நிம்மதியா இருக்குறது இந்த பிஜேபி மற்றும் அரெஸ்ஸ் சங்கிகளுக்கு பொறுக்காது


ஆரூர் ரங்
நவ 28, 2024 11:05

ஆனாலும் வடநாட்டு ஹிந்து அரசர்கள் புத்திசாலிகள். மசூதி தர்காக்களின் அடியில் கூட ஆலயங்களைக் கட்டி வழிபட்டுள்ளனர். தரைக்கடியில் ஆலயங்கள் என்பது உலக அதிசயம்.


Sampath Kumar
நவ 28, 2024 09:36

சிறப்பு சீமான் இப்போ சிரிப்பு சீமான் ஆகிவிட்டார்


AMLA ASOKAN
நவ 28, 2024 09:07

இந்துக்களின் கோவில்களை இடித்துத்தான் முஸ்லீம் மன்னர்கள் மசூதிகளை கட்டினார்கள் என்பது உண்மையா ? முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் , ஆயிரக்கணக்கான இந்து குறுநில மன்னர்கள், டில்லியில் ஆட்சி செய்த முகலாய மன்னர்களுக்கு கீழ் தங்கள் ராஜ்யத்தைஆண்டு கொண்டிருந்தார்கள் அவர்களை கண்காணிக்க நவாபுகளும் நியமிக்கப் பட்டிருந்தார்கள். இந்த குறுநில மன்னர்கள் தான் தங்கள் சமஸ்தானத்தில் புதிதாக கோவில்களையம் , மசூதிகளையும் கட்டினார்கள் . முகலாய மன்னர்கள் தாங்கள் தங்கியிருந்த டில்லி , ஆக்ரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற கலைநியமிக்க ஏராளமான கட்டிடங்களை கட்டினார்கள். தங்களது ஆலோசர்களாகவும், அமைச்சர்கலாகவும், படைவீரர்களாகவும் இந்துக்களை தான் நியமித்து இருந்தார்கள். அன்றைய காலத்தில் அவர்கள் அடிக்கடி இந்தியா முழுவதும் சுற்றி வந்தார்கள் என்றோ , எந்த ஒரு இந்து முஸ்லீம் சண்டையோ கலவரமோ ஏற்பட்டதாகவோ எவ்வித சரித்திர சான்றுமில்லை. மேலும் அவர்கள் இந்தியாவிலேயே பிறந்தும் இறந்தும் இந்திய குடிமகனாக வாழ்ந்தார்கள். அவர்கள் கீழ்த்தரமான எண்ணமுடையவர்களாக இருந்திருந்தால் ஏராளாமான கோவில்களை இடித்திருக்களாம் . மாறாக கோவில் கட்ட நிலம் & நிதி அளித்துள்ளார்கள் . இந்து முஸ்லீம் ஒற்றுமை இறுக்கமாக இருந்ததால் தான் அன்றைய இந்தியாவின் GDP 25 % என்று சரித்திரம் குறிப்பிடுகிறது . இன்றைய இந்தியாவில் வழிபட ஏராளாமான கோவில்கள் இருக்கும் போது ASI மூலம் ஆராய்ச்சி செய்து 400/500 ஆண்டு கால மசூதிகளை இடிக்கும் செயல் மசூதிகளை மட்டும் அல்ல இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கும் செயல் . கடவுள் கட்டிடங்களை பார்ப்பதில்லை , மனிதர்களின் எண்ணத்தை தான் பார்க்கின்றார் .


ஆரூர் ரங்
நவ 28, 2024 14:36

ஆக வறுமையில் வாடிய இந்தியர்களை உயர்த்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தால் கஜினி முஹம்மது படையெடுத்து வந்தானல்லவா? நீங்க எழுதியிருப்பது பாகிஸ்தான் பாடப்புத்தகத்திலிருந்து எடுத்ததா இருக்கும். அயோத்தி அகழ்வாராய்ச்சி அறிக்கையில் பாபர் மசூதி ஹிந்து ஆலயத்தின் மீது எழுப்பப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் நிபுணர் திரு KK முஹம்மது. நீங்க அவரையும் நம்பவில்லையா?


karthik
நவ 28, 2024 08:50

இந்தியாவில் குறிப்பாக வடநாட்டில் 90 சதவீதம் கோவில்கள் அழிக்கப்பட்டு தான் மசூதிகள் கட்டப்பட்டன.. தென்னகம் ஆப்கானிஸ்தான் இன்றைய துருக்கி இரான் போன்ற இடங்களில் இருந்து வெகு தொலைவில் மற்றும் இடையில் விந்திய மலைகள் இருந்ததால் தென்னக கோவில்கள் தப்பித்தன..


Amruta Putran
நவ 28, 2024 07:20

Looks like all Mosques and Darghas in India are encroached only


karthik
நவ 28, 2024 08:52

இப்பதான் இதையே யோசிக்கிறீர்களா? இந்தியாவில் 90 சதவீதம் மசூதிகள் கோவில்களை அழித்து உருவாக்கப்பட்டது தான். கோவில்கள் சாத்தான்களின் இருப்பிடம் அது இருக்க கூடாது என்பது தான் அவர்களின் முக்கிய கொள்கையே.


kantharvan
நவ 28, 2024 03:01

சுலைமான் , பரக்கத் அலி வந்து விளக்க வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை