உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ப்ளீஸ் சார், காப்பாத்துங்க... நிலச்சரிவு ஏற்பட்டவுடன் வந்த முதல் செல்போன் அழைப்பு!

ப்ளீஸ் சார், காப்பாத்துங்க... நிலச்சரிவு ஏற்பட்டவுடன் வந்த முதல் செல்போன் அழைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, உதவி கேட்டு பெண் ஒருவர் விடுத்த செல்போன் அழைப்பின் ஆடியோ வைரலாகி வருகிறது.

385 பேர் பலி

கடந்த 30ம் தேதி வயநாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அங்கிருந்த குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டதால், அங்கு வசித்து வந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. இதுவரையில் 385 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி 7வது நாளாக நீடித்து வருகிறது.

முதல் அழைப்பு

இந்த நிலையில், வயநாட்டில் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட போது, உதவி கேட்டு தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் நீத்து ஜோஜோ என்பவர் அழைப்பு விடுத்த செல்போன் ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ப்ளீஸ் சார்...

மேப்பாடி மலைப்பகுதியைச் சேர்ந்த அவர், தான் பணியாற்றும் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு, தனது கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அதோடு, தனது வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து விட்டதாகவும், தான் அருகே உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 6 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டதாகவும் கூறி, தயவு செய்து உடனடியாக உதவிக்கு ஆட்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக் கேட்டு பதறிப் போன மருத்துவமனை நிர்வாகமும், ஆம்புலன்ஸுடன் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்தது. ஆனால், சூரல்மலையை இணைக்கும் பாலம் ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால், அவருக்கு உடனடியாக உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2வது நிலச்சரிவு

இது தொடர்பாக நீத்து ஜோஜோ பணியாற்றிய மருத்துவமனையின் மருத்துவர் ஷானவாஸ் பல்லியால் கூறுகையில், 'நிலச்சரிவு ஏற்பட்டவுடன் நீத்து ஜோஜோ தான் முதலில் அழைத்தார். மிகவும் பதற்றத்துடன் பேசினார். அவருக்கு உதவுவதற்காக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸுடன் மீட்பு குழுவினரை அனுப்பி வைத்தோம். தொடர்ந்து செல்போனில் தொடர்பில் இருந்த அவரை, 2வது நிலச்சரிவுக்குப் பிறகு எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை,' எனக் கூறினார். இதனிடையே, நீத்து ஜோஜோவின் செல்போன் ஆடியோ ரெக்கார்டு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. VENKATESH RAJA
ஆக 05, 2024 11:39

வயநாட்டில் ஒரு இயற்கை வன் கொடுமை வானளாவிய மலைகள் வானுயர்ந்த மரங்கள் வந்தாரை மகிழ்வித்த வனப்பு தலைமுறைகள் கடந்து தலைத்து நின்ற மானுடம் தலைநிமிர்ந்து பார்க்கும் இடமெல்லாம் தண்ணீரின் தடங்கள் மட்டுமே இயற்கை ஆடிய அந்த கோரத்தாண்டவத்தில் கோமளமும் நிற்கவில்லை களிறும் கரை ஒதுங்க வழியில்லை செம்மண் சேற்றை செதுக்க செதுக்க சென்நிறமாய் சிதைந்த மேனிகள் சிங்கார மாளிகை சிதைந்து சின்னாபின்மாகி சிறகடித்துப் பறந்து அந்த சிட்டுகள் சகோதர சகோதரிகள்-3பேர் சட்டென்று சமாதியானதோ கடந்து செல்ல பாதை தந்த பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் கண்டதுண்டமாகி கரை ஒதுங்கிப்போனது கண்ட இடமெல்லாம் பிணக்குவியல் காண்போர் நெஞ்சை கசக்கி பிழிகிறது முதலுதவி வண்டியின் முனங்கல் ஓலமும் முடிந்தபாடில்லை முண்டக்கையில் சூரல்மலை மேப்பாடி அட்டமலை அலறலும் அடங்குமோ அதிவிரைவில் ? ஆண்டவா உன் பசி அடங்க எம்மவரா இரை? ஆறுதல் சொல்லும் நீ அழ வைக்கலாமா? அணைக்கும் கரம் கொண்ட நீ அற்ப மனிதனை ஆறாதுயரில் தள்ளலாமா? அன்பு நிறைந்த இறைவா அருள் வழங்கும் கொடை வள்ளலே இழந்த அத்துனையும் இனிவரப்போவதில்லை ஆனால் ஆறுதல் தந்து ஆற்றி தேற்றும் ஆற்றல் உமக்கொருவருக்கே உண்டு உம்பாதம் பணிந்து மன்றாட்டு வைக்கிறோம் எம்மக்கள் பாவங்களை மன்னியும் என்று ! சு.சரவணச்செல்வி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.


Parameswar Bommisetty
ஆக 05, 2024 11:25

மனித இனத்தின் பேராசை தான் இதற்கு காரணம் என்று இயற்கை நிரூபித்து காட்டியிருக்கிறது. இனியும் நாம் திருந்தவில்லை என்றால் ??????????


மேலும் செய்திகள்