மேலும் செய்திகள்
விபத்தில் சிக்கிய மணமகள் மணமேடையாக மாறிய மருத்துவமனை
24 minutes ago
ஆவணங்களை மாற்றி எழுதிய தேவசம் போர்டு மாஜி தலைவர்
37 minutes ago
ஜார்க்கண்ட், மே.வங்கத்தில் ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல்
39 minutes ago
ஹரிபூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “நாட்டின் பிரதமரையும், முதல்வர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமை வெளிநாட்டில் இருந்து ஊடுருவியவர்களுக்கு இல்லை. எனவே, ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவோம்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த பீஹாரில், முன்னதாக எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதையடுத்து, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதற்கு, தமிழகம், மேற்கு வங்க மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'எஸ்.ஐ.ஆர்., பணி மிகவும் ஆபத்தானது; மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித் துஇருந்தார். இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணி வாயிலாக ஊடுருவல்காரர்கள் அகற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தின் ஹரிபூரில் எல்லைப் பாதுகாப்பு படையின், 61வது எழுச்சி நாள் நேற்று நடந்தது. அவசியம் இதில் பங்கேற்ற அமித் ஷா கூறியதாவது: ஊடுருவலைத் தடுக்க, எல்லை பாதுகாப்பு படையினர் அயராது உழைத்து வருகின்றனர். ஊடுருவல்காரர்களைத் தடுப்பது தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயக அமைப்பு மாசுபடாமல் பாதுகாக்கவும்தான். இது மிகவும் அவசியமானது. நாட்டில் ஊடுருவியுள்ளவர்களை அகற்றும் பிரசாரத்தை சில அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்த முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. ஊடுருவல்காரர்களை அகற்றும் வகையில், வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்யும் பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. இதற்காகவே, எஸ்.ஐ.ஆர்., செயல்முறை துவங்கப்பட்டுள்ளது. இதை, சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. நம் நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அடையாளம் கண்டு அகற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டின் முதல்வர் அல்லது பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது. எச்சரிக்கை எந்தவொரு ஊடுருவல்காரருக்கும், நம் ஜனநாயக அமைப்பை மாசுபடுத்தவோ, ஜனநாயக முடிவுகளை பாதிக்கவோ உரிமை இல்லை-. எஸ்.ஐ.ஆர்., என்பது நம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதையும், சுத்திகரிப்பதையும் நோக்கமாக கொண்ட செயல்முறை. தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செயல்முறையை பொதுமக்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும். ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு பொதுமக்கள் ஒருபோதும் ஆதரவு தர மாட்டார்கள். பீஹார் தேர்தல் முடிவுகள், ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தந்த எச்சரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
24 minutes ago
37 minutes ago
39 minutes ago