உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கல்லுாரி விடுதியில் உள்ள மாணவியர் நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்: மம்தா கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

கல்லுாரி விடுதியில் உள்ள மாணவியர் நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்: மம்தா கருத்துக்கு வலுக்கும் கண்டனம்

கொல்கட்டா: 'கல்லுாரி விடுதியில் தங்கியுள்ள மாணவியர், நள்ளிரவில் வெளியே வரவேண்டாம்' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு ப ல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

கூட்டு பலாத்காரம்

இங்குள்ள மேற்கு வர்தமான் மாவட்டம் துர்காபூரில், தனியார் மருத்துவ கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு எம்.பி.பி.எஸ்., படித்து வரும் ஒடிஷாவை சேர்ந்த மாணவி, கடந்த 10ம் தேதி இரவு, தன் ஆண் நண்பருடன் உணவருந்திவிட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த கும்பல், பணம் கேட்டு மிரட்டியது. ஆண் நண்பரை பணம் எடுத்து வரும்படி விரட்டிவிட்டு, மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியது. இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'நள்ளிரவு 12:30 மணிக்கு விடுதியில் இருந்து மாணவி வெளியேறியது எப்படி? இந்த சம்பவத்துக்கு, அக்கல்லுாரி நி ர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும். விடுதிகளில் தங்கும் மாணவியர், இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு

'தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் போலீசாரால் பாதுகாப்பு அளிக்க முடியாது' என, தெரிவித்திருந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரில், 'விடுதியில் இருந்து மாணவி, இரவு 8:00 மணிக்கு வெளியேறினார்' என, தெரிவித்துள்ளார். கல்லுாரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட தகவலிலும், அந்த நேரமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் மம்தாவின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இது குறித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., அக்னிமித்ரா பால் கூறுகையில், “ஆப்கன் போல, மேற்கு வங்கத்திலும், மம்தா தலைமையில் தலிபான் அரசு நடக்கிறது. இங்கு, பெண்கள் நள்ளிரவுக்குப் பின் வெளியே வரவேண்டாம் என கூறுகிறார். ''நள்ளிரவில் மக்கள் அலுவலகங்களுக்குச் செல்லமாட்டார்கள், டாக்டர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லமாட்டார்கள். நள்ளிரவுக்குப் பின் வெளியே வந்தால் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவர் என, முதல்வர் கூறுகிறார்,” என, தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள முதல்வர் மம்தா, ஊடகங்களில் பேசிய தன் கருத்து, திரித்து கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இருவர் கைது

மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க போலீசார் தெரிவித்தனர். ஒடிஷா மாணவி பலாத்காரம் செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜி, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மம்தா பானர்ஜியை வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

palaniappan. s
அக் 14, 2025 13:41

மம்தா சொல்வது சரிதான். நள்ளிரவில் திரிணாமுல் தொண்டர்கள் நடமாட்டம் சாஸ்த்தி இருப்பதால், வீட்டிற்குள் இருப்பதுதான் பாதுகாப்பு.


renga rajan
அக் 14, 2025 13:25

இரவு நேரம் பெண்கள் அதுவும் வெளிமாநில பெண்கள் ஏன் 8 மணிக்குள் விடுதிக்குள் வந்துவிடவேண்டும் ஊரை சுத்தவா போனீங்க படிப்பு பெயரை சொல்லி ஏமாற்றுவது மம்தா is ரைட்


மகாதேவன்
அக் 14, 2025 11:36

வராமலே இருக்க நீ எதுக்கு இருகிர. பேசாம உன் வேலைய இராஜினாமா பன்னிடு


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 14, 2025 10:51

விடியல் ஆட்சி போல அங்கேயும் பாதிக்கப்பட்டவர் தான் குற்றவாளி. ஒரே கூட்டணி ஆட்சி.


Thirumal Kumaresan
அக் 14, 2025 09:40

இந்த கருத்தில் நான் மம்தா பக்கமே பெண்கள் பாதுகாப்பாக இருக்க இரவு நேரங்களில் தேவை இல்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது தான்.


vbs manian
அக் 14, 2025 08:56

தாலிபான் கூட இப்படி பேசவில்லை.


Barakat Ali
அக் 14, 2025 08:34

தானும் ஒரு பெண் என்பதை மறந்து பேசியுள்ளார் ... அவரது தரம் இப்படித்தான் ...


Modisha
அக் 14, 2025 08:28

எங்க ஆட்சி முடியிர வரைக்கும் பெண்கள் வெளியே vara வேண்டாம் என்று ஒட்டுமொத்தமா சொல்லவேண்டியது தானே .


T.Senthilsigamani
அக் 14, 2025 07:49

அடேங்கப்பா இவரின் கருத்து மிகவும் கடுமையாக கண்டிக்க தக்கது. ஒரு கற்பனைக்கு ஒரு உவமைக்கு இதே போன்ற சம்பவத்தில், உத்திர பிரதேச பிஜேபி முதல்வர் யோகி ஆதியநாத் பெண்கள் நள்ளிரவில் வர வேண்டாம் என்று சொல்லி இருந்தால் அவ்வளவு தான் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் காங்கிரஸ், விசிக, மதிமுக, இடது மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் பொங்கே பொங்கென்று பொங்கியிருப்பர்கள் . பழமொழி அக்கா தலைமையில் மெழுகு வர்த்தி ஏந்திய ஊர்வலங்கள் நடந்தியிருக்கும். ஆனால் இப்போது மம்தா என்பதால் கள்ள மௌனங்கள் தான் அனுஷ்டிப்பார்கள் . இது தான் நிதர்சனம்


Chandru
அக் 14, 2025 06:44

அப்ப வருவதை எதிர் கொள்ள வேண்டியதுதான் . நல்லது சொன்னாலும் எடுத்து கொள்ள மாட்டேன் என்றால் என்ன செய்வது . தன் தலையிலே தானே மண்ணை அள்ளி போட்டு கொள்வதை போல. எல்லாம் காலத்தின் கோலம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை