உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குண்டர் அரசு; குண்டர்களுக்கான அரசு: குட்டு வைத்தார் கவர்னர்!

குண்டர் அரசு; குண்டர்களுக்கான அரசு: குட்டு வைத்தார் கவர்னர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ''மேற்குவங்க மாநில அரசு குண்டர்களால், குண்டர்களுக்காக நடத்தப்படுகிறது. போக்கிரித்தனம் பரவலாக உள்ளது,'' என அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டை, அவர் மறுத்துவிட்டார். இதை அரசியலாக்க மம்தா கடும் முயற்சி செய்தார். கவர்னருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மம்தா பானர்ஜி மீது கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மம்தாவிற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது.

பூனைக்கு ஒரு காலம்!

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது போல, கோல்கட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அரசுக்கு கவர்னர் ஆனந்த போஸ் கண்டனம் தெரிவித்தார். ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் குண்டர்களால் அரசு நடத்தப்படுகிறது. இது குண்டர்களுக்கான அரசாக உள்ளது. போக்கிரித்தனம் பரவலாக உள்ளது. பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது.

அரசின் கடமை!

மாணவர்களிடையே அச்சமும், பாதுகாப்பின்மையும் நிலவுகிறது. பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு தவறிவிட்டது. மக்களின் உயிர், உடைமைகளை பாதுகாப்பது அரசின் கடமை. மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மருத்துவக் கல்லூரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை எங்கு நடந்தாலும் அதை தடுக்க தவறினால், முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

மாயவரத்தான்
செப் 04, 2024 13:10

ஐயா தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது. இம் என்றால் சிறைவாசம் ம்கும் என்றால் குண்டர் சட்டம். குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடிவித்தால் மீண்டும் வேறு ஒரு குண்டர் சட்டம் என்னத்த சொல்றது


மாயவரத்தான்
செப் 04, 2024 13:10

ஐயா தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது. இம் என்றால் சிறைவாசம் ம்கும் என்றால் குண்டர் சட்டம். குண்டர் சட்டத்தில் இருந்து நீதிமன்றம் விடிவித்தால் மீண்டும் வேறு ஒரு குண்டர் சட்டம் என்னத்த சொல்றது


என்றும் இந்தியன்
ஆக 19, 2024 16:19

ஐயையோ ஐயையோ டாஸ்மாக்கினாட்டு கவர்னர் கர்நாடக கவர்னர் இப்போது மேற்கு வங்காள கவர்னர் அந்த அந்த மாநிலத்தின் முதலைகளை அதாவது முதல்வர்களை இப்படி போட்டு தாக்குகின்றார்களே, பேஷ் பேஷ்


Sethuraman Mahadevan
ஆக 18, 2024 19:05

சரி ஆட்சிய தூக்கி அட்சி செய்த ஆசாமியரை14வரோடம் தேர்தலில் நிற்க்கவே தகுதி நீக்கம் செய்யும் சட்டம் ஏற்படுத்தி,அதை உடன் அமுல் படுத்த வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 12:13

நாட்டை வெறுப்பவர்கள் எப்படியெல்லாம் சீப் ஆக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் அந்த கேரளா காக்கை கொடியை ஏற்ற உதவவில்லை ..... அது தாற்காலிகமாக அமர்ந்து எழுந்தது ..... காமெரா ஆங்கிள் அப்படி .... என்று பரவும் வீடியோ .... தேசப்பற்று என்றதும் எல்லா தறுதலைக்கும் எாியத்தானே செய்யும் .... மாற்று வீடியோ எடுத்து வெளி இட்டவன் கிராபிக்ஸ் செய்திருக்கலாமே...தேச விரோதியாகவும் இருக்கலாம் ..... சரி, இது பொய்யாக இருந்தாலூம் , மக்கள் மனதில் தேசிய உணர்வை வளர்க்க உதவட்டுமே ..... அது பொறுக்கல சிலநா தாரிக்களுக்கு ......


Sridhar
ஆக 18, 2024 11:57

சும்மா பினாத்திக்கிட்டே இருக்கக்கூடாது. 356 ஐ பிரயோகிக்க வக்கில்லாம சவடால் பேச்சு எதற்கு? இவ்வளவு மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள், சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில் இருக்கிறது, முதல்வரோ பொறுப்பற்றவராக தனக்கெதிராகவே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு காமெடி செய்பவராக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்யவில்லையென்றால், அந்த சட்டம் அரசியல் சட்டத்தில் தேவையே இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 12:18

சிந்தித்து வாக்களிக்கவே தகுதியில்லாத மாக்கள் பணத்துக்கோ, மதுவுக்கோ, பொருளுக்கோ விலைபோய் வாக்களித்து ஒரு அரசைத் தேர்ந்தெடுக்கிறார்கள் ..... அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிச்சயமாகத் தவறுக்கு மேல் தவறுகள் செய்யும் ..... ஊழல், மோசடி, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு நிச்சயம் இருக்கும் .... அதற்காக ஆட்சியைக் கலைத்தால் ஜனநாயக விரோதச் செயல் என்று கூறி ஜனாதிபதியிடமே போவார்கள் .... மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைப் போட்டுக்கொண்டால் மத்திய அரசு ஏன் தலையிடவேண்டும் ????


KRISHNAN R
ஆக 18, 2024 11:46

நன்றி கெட்ட நாட்டு மக்களை கோல்கட்டா மூலம்... எக்ஸ் போர்ட் செயும் மாநிலம் ....


T.sthivinayagam
ஆக 18, 2024 11:38

இது தான் பிரபஞ்ப சூட்சும்ம்


gmm
ஆக 18, 2024 09:38

மம்தா மாநில நிர்வாகம் குண்டர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் போது, அதனை கலைக்க பரிந்துரை கவர்னர் செய்ய வேண்டும். தேச பாதுகாப்பு இருந்தால் தான் தேர்தல், நீதிமன்றம் நடத்த முடியும். கவர்னர் அதிகாரம் மாநிலத்தை பொறுத்தவரை உச்ச, தலைமை அதிகாரம். பியூன் முதல் கவர்னர் வரை அரசு பதவி ஏற்றவுடன் முழு அதிகாரம் அமுல் படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
ஆக 18, 2024 09:37

இவரெல்லாம் கவர்னர் பதவிக்கு லாயக்கற்றவர்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 11:53

ஏன் தவறுகளைத் தட்டிக்கேட்பதாலா ????


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ