உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எது உண்மையான சமூகநீதி: பிரதமர் மோடி விளக்கம்

எது உண்மையான சமூகநீதி: பிரதமர் மோடி விளக்கம்

பணாஜி : ''மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மாநிலங்களில், 100 சதவீதம் முழுமையாக நிறைவேற்றப்படுவது தான் உண்மையான மதச்சார்பிமை மற்றும் சமூகநீதி,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கோவாவில் நேற்று நடந்த, 'வளர்ந்த பாரதம்; வளர்ந்த கோவா' பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசின் மிக முக்கியமான மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் கோவாவில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்காக மாநில அரசுக்கு வாழ்த்துக்கள். நலத்திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேறும்போது தான் மக்கள் மத்தியிலான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.மக்கள் தங்கள் உரிமைகளை பெற யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியது இல்லை. மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மாநிலங்களில் முழுமையாக நிறைவேற்றப்படுவது தான் உண்மையான மதச்சார்பின்மை, சமூகநீதி. அதை நிறைவேற்றுவோம் என்பதே என் உத்தரவாதம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை