உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதர்சன சக்ரா! : உள்நாட்டில் தயாராகும் வான் பாதுகாப்பு கவசம்: 2035க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு

சுதர்சன சக்ரா! : உள்நாட்டில் தயாராகும் வான் பாதுகாப்பு கவசம்: 2035க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு

புதுடில்லி: இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' போல், இந்தியாவின் வான்பரப்பை பாதுகாக்க, 'சுதர்சன சக்ரா' திட்டம் தயாராகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்படும் இந்த வான் கவசம், 2035ல் முழு செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. டில்லியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், 'சுதர்சன சக்ரா' வான் பாதுகாப்பு கவசம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். “ஸ்ரீ கிருஷ்ணரின் சுதர்சன சக்ரா பாதையை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். ''நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக, உருவாக்கப்பட்டு வரும் இந்த கவச அமைப்பு, எந்தவொரு தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டது. அடுத்த, 10 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்,” என, தெரிவித்திருந்தார். இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் நாட்டின் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு வலையமைப்பை, ஒரு அதிநவீன ஏவுகணை தாக்குதல் படையுடன் இணைப்பதே, சுதர்சன சக்ரா திட்டத்தின் மையமாகும். அதன்படி, ஐ.ஏ.சி.சி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஏர் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சிஸ்டம் நெட்வொர்கை, ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை கட்டமைப்புடன் சேர்த்து பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் இலக்கு. இந்த கலவையானது, அச்சுறுத்தல்களை கண்டறிந்து, துல்லியமான தாக்குதல்களை வழங்குவதற்கான தடையற்ற வலையமைப்பை உருவாக்கும். இதன் வாயிலாக, நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதுகாக்கப்படும்.

அச்சுறுத்தல்

ஐ.ஏ.சி.சி.எஸ்., என்பது ஒரு முழுமையான தானியங்கி, நிகழ்நேர வான் பாதுகாப்பு கட்டளை அமைப்பாகும். இது, பல்வேறு சென்சார்கள், ரேடார்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை ஒருங்கிணைத்து, விரிவான வான் சூழ்நிலை தொடர்பான தகவல்களை வழங்குகிறது.இது, வான், நிலம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை செயல்படுத்துகிறது. அதுமட்டுமின்றி வான்வழி அச்சுறுத்தல்களுக்கு விரைவான பதிலடி தருவதையும் உறுதி செய்கிறது. ஐ.ஏ.சி.சி.எஸ்., என்பது, 'பைபர் ஆப்டிக்' அடிப்படையிலான தொலைதொடர்பு கட்டமைப்புடன் சென்சார்கள், போர் விமானங்கள், ஆகாஷ், பராக் - 8, எம்.ஆர்.எஸ்.ஏ.எம்., மற்றும் எஸ் - 400 போன்ற ஏவுகணை அமைப்புகளுக்கு உடனடி தகவல்களை வழங்குகின்றன. இதனால், எதிரி விமானங்கள், ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளை கண்காணிக்கவும், பொருத்தமான எதிர் நடவடிக்கைகளை விரைவாகப் பயன்படுத்தவும் படைகளுக்கு உதவுகிறது. அச்சுறுத்தல்களை கண்காணிப்பதிலும், ஆயுதப் பணிகளை மேம்படுத்துவதிலும் உதவுவதற்காக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறையிலான திறன்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய தற்காப்பு போர்வை இஸ்ரேலின் மிகவும் பெருமையாகக் கூறப்படும், 'அயர்ன் டோம்' மற்றும் அமெரிக்காவின், 'கோல்டன் டோம்' போல் ஒரு சிறந்த ஏவுகணை பாதுகாப்பு கேடயமாக செயல்படும். 'ஹேக்கிங் - பிஷிங்' போன்ற டிஜிட்டல் அச்சுறுத்தல்களை சமாளிக்க, சைபர் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளை, இந்த நவீன வான் பாதுகாப்பு கவசமான சுதர்சன சக்ரா உள்ளடக்கியுள்ளது.

பன்மடங்கு சக்தி

தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 2035க்குள் சுதர்சன சக்ராவை முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதை மத்திய அரசு நோக்கமாக வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட எஸ் - 400 வான் கவசம் நமக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஆகாஷ்தீர்' கருவியும் எதிரிகளின் ஏவுகணைகளை பந்தாடின. தற்போது உருவாக்கப்பட்டு வரும் சுதர்சன சக்ரா, இந்த ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கவசத்தைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Selvaraj
ஆக 16, 2025 19:05

தங்கள் வாகனம் , தங்கள் cooling glass எப்போது இந்திய தயாரிப்பு பொருட்களாகும் ? தனக்குப்பின் தானம், அது adivce விஷயத்திலும் பின்பற்றினால் நல்லது.


vivek
ஆக 16, 2025 19:22

செல்வராஜ். நீங்கள் சொல்வது நடக்கும்..அப்போது கூனி குறுகி நிற்பீர்கள்


ஆரூர் ரங்
ஆக 16, 2025 21:36

இந்த உயர் பாதுகாப்பு கார் காங்கிரஸ் ஆட்சியில் ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டது.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 16, 2025 18:40

சீக்கிரம் கொண்டு வாருங்கள்.


kumaran
ஆக 16, 2025 17:11

திறனுள்ள மத்திய அரசால் நிச்சயமாக நாம் தன்னிறைவான வல்லரசாக மட்டுமல்ல நல்லரசாகவும் வரும் தூரம் வெகு தொலைவில் இல்லை


mathavan
ஆக 16, 2025 15:00

கள்ள ஓட்ட வாங்கி ஜெயிச்சவர்கள்


ராஜாராம்,நத்தம்
ஆக 16, 2025 17:27

திமுகவுக்கு கேட்கப் போகுது மாதவா அப்றம் போட்டு பொளந்துருவானுக...


sankaran
ஆக 16, 2025 12:28

அருமையான விஷயம். பிரதமருக்கு நன்றி


N Srinivasan
ஆக 16, 2025 10:00

2035 என்பது ஒரு அதிகமான நாட்கள் இந்தியாவின் பகுதிகளை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என 4 பிரிவுகளாக பிரித்து முக்கியமான பகுதிகளை தடுக்க வேண்டும். அதுபோல நாட்டில் உள்ள முக்கியமான பகுதிகள் அணு ஆலைகள், தடுப்பு அணைகள், கோவில்கள் என பல முக்கியமான பகுதிகளை முதலில் காப்ப்பாற்ற வேண்டும் இந்த மாதிரி வரும் 10 வருஷங்களில் படிப்படியாக நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.


Kasimani Baskaran
ஆக 16, 2025 07:01

எத்தகைய ஏவுகணை வந்தாலும் பல கிகாவாட் லேசர் கேனன்களை வைத்து சுட்டு வீழ்த்தும் தொழில் நுணுக்கம் வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2025 04:59

அய்யா அப்துல் கலாம் இருந்திருந்தா சந்தோஷ பட்டிருப்பார்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 16, 2025 01:06

ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ். எல்லாரும் பலம்மா கை தட்டுங்க. ரயில்வே கவச் வருது, வருது, வருது ன்னு சொல்லி ரெண்டு தேர்தல ஜெயிச்சாச்சு. இன்னும் வந்த பாடில்லை. இப்போது புதுசா உருட்டு. After all, ஒரு எய்ம்ஸ் கட்டுவதற்கு இவ்வளவு நாள் ஆகுது. இந்த அழகில் புது கவச், புது புருடா.


Kasimani Baskaran
ஆக 16, 2025 06:58

சொந்த மாநிலத்துக்கு எய்ம்ஸ் வரவேண்டும் என்ற அக்கறையில்லாத திராவிட ஜந்துக்களுக்கு இது போலத்தான் மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்பி இன்புற முடியும்.


Palanisamy Sekar
ஆக 16, 2025 07:31

ஊழலில் திளைக்கும் இந்த திராவிட மாடலுக்கு சப்போர்ட் செய்கின்ற முட்டாள்களுக்கு நாட்டு பற்று இருக்க வாய்ப்பே இல்லை.


SUBBU,MADURAI
ஆக 16, 2025 09:00

பொய்கிந்த்புரம் sorry ஜெயஹிந்த்புரம் என்கிற போலி பெயரில் இருக்கும் உங்களுக்கு பொய் சொல்வதற்கான நேர்த்தி இன்னும் கைவரப் பெறவில்லை. எனவே இது பத்தாது இன்னும் திறமையை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.


sri
ஆக 16, 2025 10:01

Madurai Jaihindipuram, didn't you see the news couple of month back about train mishap averted due to Kavas, don't read only Murasoli, read other newspapers as well


N Srinivasan
ஆக 16, 2025 10:02

சொந்த மாநிலத்தில் AIMS வந்தால் அப்புறம் எப்படி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் போன்ற மக்கள் எப்படி காலம் தள்ளி பணம் சுருட்டுவது.


sankaran
ஆக 16, 2025 12:29

பாகிஸ்தான் போயி பாதுகாப்பாக வாழுங்க


Anand
ஆக 16, 2025 14:05

சொறிநாய் ஏன் இவ்விடம் வெறும் இருநூறு ரவைக்கு ஊளையிடுகிறது? பாகிஸ்தான் சென்று ஊளையிட்டால் தக்க வெகுமதி கிடைக்கும்..


vivek
ஆக 16, 2025 15:08

மிக பொருத்தம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை