உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா என்ன தர்ம சத்திரமா: சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டம்!

இந்தியா என்ன தர்ம சத்திரமா: சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு கடத்தப்படுவதை எதிர்த்தும், இந்தியாவில் வசிக்க அனுமதி கோரியும் இலங்கை நாட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபங்கர் தத்தா, 'இந்தியா என்ன தர்ம சத்திரமா' என்று கேள்வி எழுப்பினார்.விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காகஇலங்கையை சேர்ந்த ஒருவர், 2015ல் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.'உபா' சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரை, தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.'தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்; அப்படி வெளியேற்றப்படும் வரை, அகதி முகாமில் தடுப்புக்காவலில் இருக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. அதன்படி தான், மூன்றாண்டுகளாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை இந்தியாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை நாட்டவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.'விடுதலை புலிகளின் சார்பில் போரில் பங்கேற்றுள்ளேன். அந்த நாட்டுக்கு சென்றால் கைது, சித்ரவதையை எதிர்கொள்ள நேரிடும்' என்றும் அவர் மனுவில் கூறி இருந்தார்.இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தத்தா, இங்கேயே தங்கிக்கொள்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது' என்று கேள்வி எழுப்பினார். 'இந்தியாவில் வசிப்பதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்' என்றும் நீதிபதி கூறினார்.''உலகம் முழுவதும் இருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. நாங்கள் இங்கு 140 கோடி மக்கள் தொகையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்,'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.'அவரது நாட்டில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது,' என்று இலங்கை நாட்டவரின் வக்கீல் குறிப்பிட்டபோது, 'அப்படியெனில் வேறு நாட்டுக்கு போக வேண்டியது தானே' என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.சமீபத்தில், இதேபோன்ற கோரிக்கையுடன் வந்த ரோஹின்கியா அகதிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து, நாடு கடத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Thiyagarajan S
மே 20, 2025 15:10

எல்லா அகதி பயல்களையும் விரட்டி விட்டால் எங்கள் நாடு அமைதியாக இருக்கும் வளமுடன் இருக்கும்


அசோகன்
மே 20, 2025 08:12

140 கோடி மக்கள் வாழ்க்கை போராட்டமா இரூக்குன்னு போட்டு உடைச்சிட்டீங்களே ஐயா


அப்பாவி
மே 20, 2025 07:54

அப்போ எதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வெச்சிருக்கீங்க? அடிச்சு துரத்த வேண்டியதுதானே? ஒருவேள இங்கே அகதிகள் முகாம் இருப்பதே நீதிபதிக்குத் தெரியாதோ?


PR Makudeswaran
மே 20, 2025 11:28

அது நீதிபதிக்கு தெரியும். அரசியல்வாதிகளுக்கு தான் மூளை ............ எல்லாமே அரசியல்.


Kasimani Baskaran
மே 20, 2025 04:05

ஆனால் பல எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது..


Sankar Ramu
மே 20, 2025 01:01

கொலைகாரை தண்டனைக்கு பிறகு உங்க வீட்ல வச்சிக்கிவியா?


M Ramachandran
மே 19, 2025 23:20

பங்களா தேசிகளை ஒட்டு பிச்சைக்காக ஆதரிக்கும் திமுக அரசு மேற்கு வாங்க முதல்வர் மம்தா போன்றவர்களால் நமது அரசுக்கு ஆபத்து .


Raghavan
மே 19, 2025 21:04

சம்மட்டி அடி. வழக்கை பதிவு செய்யும் போதே இந்த மாதிரியான தீர்ப்பை உடனேயே வழங்கிவிடவேண்டும்.


Anbuselvan
மே 19, 2025 20:55

CAA வில் ஏன் இலங்கை தமிழர்களை சேர்க்க கூடாது எனக்கேட்ட திரு வைகோ அவர்களுக்கு இந்த தீர்ப்பு சமர்க்கிப் படட்டும்


GMM
மே 19, 2025 20:03

இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்ட பூர்வ உரிமை இல்லை. சட்ட பூர்வ விதி, அதிகாரம் இல்லாத கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்து, தீர்வு சரியே.


Velayutham rajeswaran
மே 19, 2025 19:59

பங்களாதேஷில் இருந்து இங்கு சட்டபூர்வமாக இல்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான ஆட்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் ஆவன செய்யுமா


புதிய வீடியோ