உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திர கோவில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காரணம்: அர்ச்சகர் வெளிப்படை

ஆந்திர கோவில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு காரணம்: அர்ச்சகர் வெளிப்படை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீகாகுளம்: ஆந்திராவில் வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியான நிலையில், அதிகளவு பக்தர்கள் வந்தால் நான் என்ன செய்ய முடியம். அவர்கள் முண்டியடித்து சென்றால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என கோவிலை கட்டியவரும், அர்ச்சகருமான ஹரிமுகுந்த பாண்டா கூறியுள்ளார்.ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஹரிமுகுந்த பாண்டா, 80, என்பவர், நான்கு மாதங்களுக்கு முன் இந்த கோவிலை கட்டினார். இந்த இடம், 'சின்ன திருப்பதி' என அழைக்கப்பட்டது. ஏகாதசி திருநாளான நேற்று( நவ.,01), வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகம் காணப்பட்டனர். வளைந்து, நெளிந்து செல்லும் படிக்கட்டுகளில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

என்ன செய்வது

இந்நிலையில் ஹரிமுகந்த பாண்டா கூறியதாவது: ஒரே நேரத்தில் ஏராளமானோர் வந்தால் நான் என்ன செய்வது. கோவிலுக்கு வருபவர்களை நான் வரிசையாக அனுப்புவதுதான் வாடிக்கை. ஆனால், நேற்று அதிகம் பேர் வந்துவிட்டனர். என்ன நடந்தது எனத் தெரியவில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனக்குதைரியம் உள்ளது. வரிசையில் செல்லுங்கள் என அனைவரிடமும் கூறினேன். தரிசனத்துக்கு வருபவர்கள் முண்டியடித்து சென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும். போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் வரையில் நான் மதிய உணவுக்கு கூட செல்லாமல் மதியம் 3 மணி வரை காத்திருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.ஸ்ரீகாகுளம் எஸ்பி மகேஸ்வர ரெட்டி கூறுகையில், முகுந்தா பான்டா நிர்வகிக்கும் இக்கோவில், அறநிலையத்துறையில் பதிவு செய்யப்படவில்லை. நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னர் போலீசிடம் அனுமதி பெறவில்லை. விண்ணப்பிக்கவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
நவ 03, 2025 09:36

எல்லிரும் ஒரே நாளில் கோவிலுக்குப் போய் முண்டியடிச்சு கஷ்டத்தைச் சொன்னா சாமி ஓடிப் போயிரும். முதல்ல ஜோசியத் த நம்பாதீங்க. அதுக்கப்புறம் அவிங்க சொல்ற பரிகாரத்தை சுத்தமா நம்பாதீங்க.


Varadarajan Nagarajan
நவ 03, 2025 01:20

நம்மக்களுக்கு அவசரம் அவசரம் எல்லாவற்றிலும் அவசரம். தனிநபர் ஒழுக்கம் என்பதும் நம்மால் மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்பதெல்லாம் சுத்தமாக கிடையாது. வரிசையில் செல்லும்போதும் சரி சாலைகளில் வாகனம் ஓட்டும்போதும் சற்று பொறுமை, நிதானம், மற்றவர்களுக்கும் வழிவிடவேண்டும் என்ற எந்த நல்ல சிந்தனையும் கிடையாது. பல சாலைவிபத்துக்களும் இதனால்தான் ஏற்படுகின்றது. 1983 லிருந்த பல ஆண்டுகள் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிசெய்துள்ளேன். அப்பொழுது பேரூந்துநிலையத்தில் டிவிஎஸ் தொழிற்சாலைக்கு ஊழியர்கள் பேருந்தில் வரிசையாகத்தான் சென்று ஏறுவார்கள். பேருந்திலும் முன்இருக்கைகளில் அல்லாமல் கடைசி இருக்கைகளிலிருந்துதான் வரிசையாகத்தான் அமர்வார்கள். தொழிற்சாலை கேண்டீனில் உணவிற்கும் வரிசையில்தான் சென்று உணவருந்துவார்கள். அந்த ஒரு தொழிற்சாலை ஊழியர்களுக்குமட்டும் அப்படிஒரு ஒழுக்கம் இருப்பதைப்பார்த்து வியந்துள்ளேன். ஆனால் இன்று சாலையில் வாகன நெரிசலில் நம் வாகனத்தை நிறுத்தினால் நம்மை முந்திக்கொண்டு எத்ரிர்வரும் வாகன வழியையும் மறித்து வாகனத்தை ஓட்டுகின்றார்கள். நாம் ஏதாவது கூறினால் நம்மிடம் சண்டைஇடுகின்றார்கள். அவசர யுகம்


V. SRINIVASAN
நவ 04, 2025 13:48

சரியான கருத்து மிகவும் பொருந்தும் ஆனால் யாரும் கடை பிடிக்கமாட்டார்கள் நீங்கள் சொன்னது எல்லாம் மிகவும் சரியானது


Kasimani Baskaran
நவ 02, 2025 20:14

எங்கும் வரிசை பிடித்து பொறுமையாக காத்திருக்கும் பண்பாடு இந்தியர்களுக்கு கிடையவே கிடையாது. ஒரு முறை அலுவல் சம்பந்தமாக ஜப்பான் சென்றிருந்தேன். என்னுடன் வேலை பார்ப்போருடன் வழக்கமான சந்திப்புக்கு சென்று இருந்தோம். அப்பொழுது அவசர கால ஓலி எழுப்பப்பட்டது. 6.9 நிலநடுக்கம். 70 மாடி கட்டிடத்தில் 6 லிப்ட்களில் இரண்டு அவசர கால லிப்ட் மட்டும் இயங்கியது. அப்பொழுதும் கூட வரிசை கட்டி நின்று அமைதியாக கீழே இறங்கிச்சென்றார்கள். வெளிநாட்டவர் என்பதற்க்காக எங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள் - நாங்கள் வேண்டாம் என்று சொன்னவுடன் ஜப்பானிய மொழி நன்றாக தெரிந்தால் தவிர நீங்கள் முன்னால் செல்வது அவசியம் என்று வலியுறுத்தினார்கள். தான்னார்வலர்கள் தங்களது அவசர கால கிட்டை எங்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். வரிசை மற்றும் பொறுமை முக்கியம்.


K V Ramadoss
நவ 02, 2025 20:52

ஜப்பானியரிடம் இருக்கும் ஒழுங்கும், கட்டுப்பாடும் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது ..நம் ஒழுங்கீனத்தை உலகெங்கிலும் உள்ள சர்வ தேச விமான நிலையத்தில் காணலாம். நாம் எல்லாம் இந்தியர்கள், தமிழர்கள் என்று இங்கு மட்டும் மார் தட்டிக் கொள்ளலாம்.


Ram
நவ 02, 2025 18:50

முட்டாள் ஜனங்கள் , நாகரீகம் தெரியாத ஜனங்கள் இருக்கும்வரை இப்படி தான் நடக்கும் … அடுத்தவர்கள் மேல் பழி போடுவதை விடுத்தது மக்கள் ஒருவர் மீது ஒருவர் உரசாமல் கோவிலுக்கு சினிமாவுக்கு பொதுக்கூட்டத்திற்கு சென்றால் நலம்


T.sthivinayagam
நவ 02, 2025 20:57

ஆளும் கட்சி மீது பழியை போடும் அட்டை பூச்சிகளும் இங்கு தான் இருக்கிறார்கள்.


முருகன்
நவ 02, 2025 18:49

ஆந்திரா மற்றும் கரூர் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் வெளியே இருப்பது காலத்தின் கொடுமை


Anantharaman Srinivasan
நவ 02, 2025 18:36

கரூரில் முண்டியடித்து நடிகரை பார்த்த போதும் மரணம். ஆந்திராவில் நேரிடையாக கடவுளை தரிசிக்க சென்றபோதும் மரணம். நடிகரும் கடவுளுமாக வலம் வந்த N T ராமராவை காண பலமுறை மக்கள் கூடிய போது எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


Thravisham
நவ 02, 2025 18:47

கரூரில் செத்தவர்கள் அத்தனை பெரும் இந்துக்கள்தான். ஒரு முஸ்லீமோ கிருத்துவனோ சாகவில்லை. இதில் அந்த கேரவன் தலைவர் மதச் சார்பின்மை பற்றி விலாவரியாக பேசுகிறார்