உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுரோட்டில் உயிருக்கு போராடிய கணவனை காப்பாற்ற கெஞ்சிய பெண்: கண்டுகொள்ளாத மக்கள்

நடுரோட்டில் உயிருக்கு போராடிய கணவனை காப்பாற்ற கெஞ்சிய பெண்: கண்டுகொள்ளாத மக்கள்

புதுடில்லி: உடல்நலக்குறைவு ஏற்பட்ட கணவனை, வாகனம் ஏதும் கிடைக்காத காரணத்தினால் டூவிலரில் மனைவி அழைத்துச் சென்ற போது விபத்து ஏற்பட்டது. தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மனைவி கையெழுத்து கும்பிட்டு கதறிய போதும் அந்த வழியாக சென்றவர்கள் யாரும் கண்டுகொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூருவின் பாலாஜி நகரில் வசிப்பவர் வெங்கட்ரமணன்(34). இன்று அதிகாலை 3:30மணிக்கு அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. உதவிக்கு ஆள் இல்லாத காரணத்தினால் தனது , வெங்கட்ரமணனை அவரது மனைவி டூவிலரில் அழைத்து சென்றார். மனைவியே அழைத்து சென்றார் முதலில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு டாக்டர் இல்லை எனத் தெரிவித்துவிட்டனர்.இதனையடுத்து அரை வேறோரு தனியார் மருத்துவமனைக்கு மனைவி அழைத்துச் சென்றார்.அங்கு இசிஜி பரிசோதனை செய்தனர். அதில் லேசான மாரடைப்பு ஏற்பட்டது என்றனர். ஆனால், தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல், ஜெயாநகரில் உள்ள மருத்தவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளனர். ஆனால், அவசர சிகிச்சையோ, ஆம்புலன்ஸ் சேவையே ஏற்படுத்தி தரவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.இதனால், வேறு வழியில்லாத காரணத்தினால் வெங்கட்ரமணனை, டூவிலரிலேயே மனைவி அழைத்துச் சென்றார். வழியில் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதனால், அங்கிருந்து செல்ல முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் மனைவி கையை கும்பிட்டு கெஞ்சினார். ஆனால், இரண்டு கார்கள், டெம்போ, டூவிலர்கள் என சென்றபோதும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.சில மணி நேரங்களுக்கு பிறகு கார் டிரைவர் ஒருவர் உதவிக்கு முன்வந்தார். அருகில் இருந்த மருத்துவமனைக்கு வெங்கட்ரமணன் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 1.5 வயதில் பெண் குழந்தை உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெங்கட்ரமணன் உடன் 5 பேர் பிறந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாகவும், தாயார் மட்டும் உள்ளதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் வெங்கட்ரமணனின் கண்களை குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN R
டிச 20, 2025 10:24

ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் முதலுதவி அளித்த மருத்துவமனை முன்னேற்பாடுகள் செய்து அனுப்பி இருக்கலாம். தவறிவிட்டார்கள்


S.F. Nadar
டிச 19, 2025 13:39

நமது சமுதாயம் எப்படி இருக்கிறது எனபதற்கு ஒரு சான்று..


SULLAN
டிச 21, 2025 13:56

சாதி மதம் இனம் மொழி என்று ஈனத்தனங்கள் இருக்கும்வரை மனித தனம் வர வாய்ப்பு illai.


visu
டிச 18, 2025 18:41

108 சேவை அங்க இல்லையா


Natchimuthu Chithiraisamy
டிச 18, 2025 11:11

அரசியல் கட்சி தலைவர்களை பார்ப்பதை மற்றும் நாடகங்களை பார்ப்பதை விட தன் உணவு உடல் மனம் முக்கியம் என்பதை இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.


N Annamalai
டிச 18, 2025 06:41

சோகம் .அதிகாலை நேரம் .வழக்கமான முன் எச்சரிக்கையாக நிறுத்தாமல் போய் இருக்கலாம் .ஆம்புலென்ஸ் சேவை எப்படி கிடைக்கவில்லை ?.


Ganapathi Amir
டிச 17, 2025 06:37

நமது சமுதாயம் எப்படி இருக்கிறது எனபதற்கு ஒரு சான்று..


சமீபத்திய செய்தி