உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யார் இந்த பயங்கரவாதிகள்?

யார் இந்த பயங்கரவாதிகள்?

யார் இந்த பயங்கரவாதிகள்?

பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் (டி.ஆர்.எப்.,) எனப்படும், காஷ்மீர் ரெசிஸ்டன்ஸ் அமைப்பு பொறுப்பேற்றது.டி.ஆர்.எப்., அமைப்பை இந்தியா, 'ஒரு பயங்கரவாத அமைப்பு' என்று வகைப்படுத்தியுள்ளது. 2008ல் மும்பை தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்- -இ-- தொய்பாவுடன், இந்த அமைப்பு தன்னை இணைத்துள்ளது.இந்த அமைப்பின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் வாயிலாக உள்ளன. 2019ல் ஜம்மு - காஷ்மீர் ஸ்ரீநகரில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இது குறித்து டெலிகிராம் செயலி வழியாக அறிவித்து, தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டது. பஹல்காமில் தாக்குதல் நடத்திய நான்கு பயங்கரவாதிகள் இந்த அமைப்பசை் சேர்ந்தவர்கள். இதில் மூவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ