உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்?: மோடிக்கு அதிக ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்?: மோடிக்கு அதிக ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். அவரே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 64 சதவீதம் பேரும், ராகுலுக்கு 17 பேரும் டைம்ஸ்நவ் மற்றும் இ.டி.ஜி., இணைந்து நடத்திய கருத்து கணிப்பில், ஆதரவு தெரிவித்துள்ளனர்.விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய பா.ஜ., பாடுபட்டு வருகிறது. அதேவேளையில் பா.ஜ.,வின் வெற்றியை தடுத்து நிறுத்த, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு ‛இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. பா.ஜ.,வை பொறுத்தவரை மீண்டும் மோடி தான் பிரதமர் வேட்பாளர். அதேநேரத்தில் இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை.

மோடிக்கு அமோக ஆதரவு

இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமர் ஆக வேண்டும். பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்? என்பது குறித்து டைம்ஸ் நவ் மற்றும் இ.டி.ஜி., இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. அதில் பிரதமர் மோடி தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். அவரே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று 64 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக ராகுல் பிரதமராக வேண்டும் என்று 17 சதவீதம் பேரும், பிரதமர் மோடி, ராகுல் தவிர மற்றவர்கள் பிரதமராக வர வேண்டும் என்று 19 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுலுக்கு ஆதரவு 'ரொம்ப லோ'

முதல் இடத்தில் பிரதமர் மோடியும், இரண்டாம் இடத்தில் ராகுலும் உள்ளனர். இருப்பினும் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்பது அதிகளவில் உள்ளது. இதனால் ராகுலுக்கு மக்கள் ஆதரவு 'ரொம்ப லோ' வாக தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.கடந்த 2019 தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த சூழலில் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என 64 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், பா.ஜ.,வினர் உற்சாகம் அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை