உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபலமான முதல்வர் யார்? யோகியை முந்தினார் நவீன்!

பிரபலமான முதல்வர் யார்? யோகியை முந்தினார் நவீன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:நாட்டில் மிகவும் பிரபலமான முதல்வர் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முந்தினார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.பிரபல ஆங்கில இதழ், மக்களின் நாடித்துடிப்பு என்ற பெயரில், அவ்வப்போது கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த இதழ் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில், பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக், 52.7 சதவீத மக்கள் ஆதரவுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கடுத்த, மற்ற நான்கு இடங்களையும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர்.நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், 51.3 சதவீத மக்கள் ஆதரவுடன், இரண்டாவது இடத்தில் உள்ளார்.வடகிழக்கு மாநிலமான அசாமின் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, 48.6 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தையும், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், 42.6 சதவீத ஆதரவுடன் நான்காவது இடத்தையும் பிடித்தார்.மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதல்வர் மாணிக் சாகா, 41.4 சதவீத ஆதரவுடன், புகழ்பெற்ற முதல்வர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Sampath Kumar
பிப் 19, 2024 11:11

அரசியல் நேர்மை, என்று பார்த்தால் இன்றைக்கு இவரை சொல்லலாம் வாழும் காமராஜர் மக்களின் நன்மதிப்பை தொடர்ந்து தக்கவைத்து வருகின்றார் வாழ்க வளமுடன்


S.F. Nadar
பிப் 19, 2024 09:37

அத்தனையும் பொய் ....டுபாக்கூர் ரிப்போர்ட் ...


Indian
பிப் 19, 2024 14:11

நீங்க சொல்லுறது கரெக்ட்டு, நம்ம ஸ்டாலின் தான் முதல் எடத்துல இருக்காரு


Viruthagiri Natanasabapathy
பிப் 19, 2024 07:14

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் , மத்திய அரசுடன் மோதல் போக்கை தவிர்த்து ,மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு மிகத் திறமையான தமிழ் IAS அதிகாரியின் துணையோடு ஒடிசா மாநிலத்தை இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளார் . மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் மேடு பள்ளம் இல்லாத , குப்பைகள் இல்லாத தூய்மையான சாலை, சுத்தமான குடிநீர், ஆக்கிரமிப்புகள் இல்லாத தொலை நோக்குடன் திட்டமிட்ட நகர் மேலாண்மை , காற்று மாசு ,ஒலி மாசு இல்லாத பேட்டரி பேருந்துகள் ஆகியவற்றை காண முடியும் . ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் பெற்ற நிதியை ஊழல் செய்யாமல் செலவு செய்து இருப்பது கண் கூடாகத் தெரியும் . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் புவனேஸ்வரில் உள்ள உயிரியல் பூங்காவோடு ஒப்பிடும் போது நமது வண்டலூர் பூங்கா எவ்வளவு மோசமாக நிர்வகிக்கப் படுகிறது என்பது கூட புரியும்.


VSaminathan
பிப் 19, 2024 06:20

திரு சிவம் என்பவரே சரியான கருத்தை தெரிவித்துள்ளார்-விக் வித் கோமாளியை பத்தி யாரும் கேள்வி கேக்காதீங்க-அப்புறம் வள்ளுவர் கோன்ட சுவதழதுல முட்டிக்கிட்டு செத்து போயிடும்.


Duruvesan
பிப் 19, 2024 06:02

திராவிட மாடலின் தந்தை கர்த்தரின் சீடர் விடியல் தான் உலகுக்கே முன் மாதிரி என கருத்து கன்னிப்பில் தகவல்


J.V. Iyer
பிப் 19, 2024 05:54

மாடல் அரசு முதல்வர் எத்தனையாவது இடம்? கடைசியில் இருந்தால் அதுகூட தெரியாமல் தம்பட்டம் அடித்துக்கொள்வார், நம்முதல்வர்


sridhar
பிப் 19, 2024 13:26

முப்பது மாநிலங்களில் முப்பத்தி ஒண்ணாவது இடம்.


வெகுளி
பிப் 19, 2024 02:43

தன் தந்தையை போன்றே இவரும் அப்பழுக்கற்ற நிர்வாகி, தேசபக்தர்... பா.ஜ. அல்லாத கட்சிகளில் உள்ள ஒரு சில உத்தமர்களில் முதன்மையானவர்....


Ramesh Sargam
பிப் 19, 2024 00:12

தமிழக முதல்வரை அவர்கள் கணக்கிலே சேர்க்கவில்லை...


Ashok
பிப் 19, 2024 09:20

FIRST from last


Siva
பிப் 18, 2024 22:58

அத்தனையும் பொய்யா .. இவனுங்களுக்கு தெரியாம கருத்து கணிப்பு எடுத்துடுட்டானுங்களோ ?


Siva
பிப் 18, 2024 22:56

எங்க பூனை மேல் மதில் கானவில்லை


Ashok
பிப் 19, 2024 09:21

pls check


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ