உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டி கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

இண்டி கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

சென்னை: இண்டி கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆந்திராவை சேர்ந்த ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கு, வரும் 21ம் தேதியுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மஹாராஷ்டிரா கவர்னராக உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zc1i4cfj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மறைந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அனைவரும், கட்சி பேதமின்றி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். இதனால், தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ், தமிழர் என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் செய்யும் கட்சி என்பதால், தமிழரான சி.பி.ராதா கிருஷ்ணனை எதிர்ப்பதா, ஆதரிப்பதா, ஓட்டளிக்காமல் நடுநிலை வகுப்பதா என்ற குழப்பத்தில் தி.மு.க., இருப்பதாக தெரிகிறது. இன்னும் ஏழு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், தி.மு.க.,வுக்கு இந்த விஷயத்தில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையே துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த, தி.மு.க., அங்கம் வகிக்கும், 'இண்டி' கூட்டணி தலைவர்கள் விரும்புவதாக தகவல் வெளியானது. அதற்கேற்ற வகையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வதற்காக, இண்டி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நேற்றிரவு நீண்ட நேரம் நடந்தது. அப்போது, ராஜ்யசபா தி.மு.க., குழு தலைவரான சிவா அல்லது 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகிய இருவரில் ஒருவரை நிறுத்த, பலரும் விருப்பம் தெரிவித்தனர். எனினும் இறுதியான முடிவு எட்டப்படவில்லை. வெவ்வேறு கூட்டணி கட்சிகளும் ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவித்ததால் இழுபறி ஏற்பட்டது.இது தொடர்பாக டில்லியில் நேற்று பேட்டி அளித்த சிவா, ''துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை, இண்டி கூட்டணி தலைவர்கள் தான் முடிவு செய்வர். நான் எதுவும் கூற முடியாது,'' என்றார். இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு, அனைத்து கட்சித் தலைவர்களிடமும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி வருகிறார். முதல்வர் ஸ்டாலினுடனும் அவர் பேசியுள்ளார். இதனால், இண்டி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல் குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, 'இண்டி கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுபவர் வெற்றி பெற வாய்ப்பில்லை. அதனால், முக்கிய தலைவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. 'துணை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்திவிட்டு, அதோடு அரசியலில் இருந்து ஓரங்கட்டி விடுவர் என்ற அச்சமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.அறிவிப்புஇந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்தார். இவர் இண்டி கூட்டணி வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அவர் அறிவித்தார்.கோவா மாநிலத்தின் முதல் லோக் ஆயுக்தா தலைவராகவும், குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்த சுதர்சன் ரெட்டி, உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். அவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டது கிடையாது. இப்போது தான் முதல் முறையாக போட்டியிடுகிறார். இவர் 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று கார்கே இன்று அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 95 )

Thravisham
ஆக 20, 2025 19:52

Anderson killed 25,000 Indians in the Bhopal Gas Tragedy. Rajiv Gandhi helped him escape from India. When CBI appealed to re the case, Justice B. Sudershan Reddy refused. Now he is Sonia Gandhi’s Vice Presidential candidate.


சாமானியன்
ஆக 19, 2025 22:43

இண்டி கூட்டணி திமுக பேசிப் பேசியே தோல்வி அடைகிறார்கள். இது தமிழ் நாட்டுக்கு மிக மிக நல்லது.


இராம தாசன்
ஆக 19, 2025 20:40

பொன்முடி கூட சேர்த்து கொள்ளலாம்


சந்திரன்
ஆக 19, 2025 19:46

என்னமா வாங்குன காசுக்கு மேலே கூவரான்பா இந்த ஓவியன்.ஆனால் அசிங்கமா போச்சே கொமாரு


vivek
ஆக 19, 2025 20:29

ஓவியன் இருக்கட்டும்...நமக்கு காமெடி பிசு டைம்பாஸ் அவர்தான்


Kasimani Baskaran
ஆக 19, 2025 18:20

என்ன ஒரு வன்மம்...


RAVINDRAN.G
ஆக 19, 2025 16:54

துணை ஜனாதிபதியால் மக்களுக்கு என்ன பயன்? சற்று விளக்கி கூறவும்? எனக்கு தெரிந்த வரையில் சுருக்கமாக, குடியரசு துணைத் தலைவர் என்பவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயல்படுகிறார். குடியரசு தலைவருக்கு இந்தியாவில் பெரிய அதிகாரம் இல்லை. சில நாடுகளில் ஒரு ஷோ கேஸ் பொம்மை. ஆகவே இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டாம். அது ஒரு கௌரவ பதவி மட்டுமே.


vivek
ஆக 19, 2025 18:19

தமிழ்நாட்டிலிருந்து போன 40 எம்பி.,க்களால் என்ன பிரயோஜனம் ..நீங்கதான் கொஞ்சம் சொல்லுங்களேன்


A viswanathan
ஆக 19, 2025 18:46

முன்னாள் நீதி அரசரே கங்கையில் நீராடிய நீங்கள் சாக்கடையில் விழுந்து விடாதீர்கள்.


kamal 00
ஆக 19, 2025 20:15

உன்னால உன் வீட்டுக்கு என்ன பயன்?


kamal 00
ஆக 19, 2025 20:17

அலிபாபா வும் 40 திருடர்களும் நல்லா சிக்கி கிட்டானுக..... இப்போ தமிழர் உயர் பதவி வர கூடாது ன்னு ஓட்டு போடுவானுக பாருங்க


Svs Yaadum oore
ஆக 19, 2025 14:00

கோயம்பத்தூர்காரர் தமிழர் என்று விடியல் இந்தி கூட்டணி சைக்கோ திட்டவட்ட அறிவிப்பு .....அப்பறம் அதற்கும் மேல் யார் தமிழர் என்று விடியலுக்கு என்ன பிரச்சனை ??...தமிழன் ஓங்கோல் ரெட்டிக்கு ஆதரவு கொடுக்கமுடியுமா ??....


P. SRINIVASAN
ஆக 19, 2025 17:15

அடேய் சாங்கி .... CP ராதாகிருஷ்ணன் ஒரு RSS மற்றும் பிஜேபி கட்சியை சார்ந்தவர். நீங்கள் ஏன் பொது வேட்பாளரை நிறுத்தக்கூடாது? மைல்ச்சாமி அண்ணாமலை போன்றவர்கள் இருக்கும்போது ஏன் கட்சி சார்பில்?


vivek
ஆக 19, 2025 17:37

ஆமாம் சீனு...ரொம்ப அசிங்கமா போயிடிச்சி....என்ன செய்ய....கடைசியில் வெத்து வேட்டு ஆக்கிட்டாங்க


kamal 00
ஆக 19, 2025 20:18

கொத்தடிமை கதறல்


Svs Yaadum oore
ஆக 19, 2025 13:59

இது தமிழனை வேண்டும் என்றே இழிவுபடுத்தவா ??...


venugopal s
ஆக 19, 2025 13:39

பாஜகவுக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் பிரதமராக ஒரு தமிழரை நியமிக்க வேண்டியது தானே?


Svs Yaadum oore
ஆக 19, 2025 13:54

விடியலுக்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் முதல்வராக ஒரு தமிழரை நியமிக்க வேண்டியது தானே? எதற்கு ஓங்கோல் நபரை முதல்வராக நியமனம் செய்யனும் ??....


KavikumarRam
ஆக 19, 2025 14:48

மூப்பனாருக்கு ஆப்பு வச்சது உன்னோட முத்தமிழை நாசமாக்கிய அறிஞ்சர். அது தெரியுமா உனக்கு.


vivek
ஆக 19, 2025 15:32

வேணுகோபால்.....அடுத்த வருடம் தமிழர் அண்ணாமலை முதல்வராக இருப்பார்... இப்போ எரியுமே...பர்னால் தடவிக்கோ


Anand
ஆக 19, 2025 15:43

முதலில் தமிழ்நாட்டில் ஒரு தமிழனை முதல்வராக்க வக்கில்லை, பேசவந்துட்டான்..


Kjp
ஆக 19, 2025 16:33

அதே மாதிரி பச்சை தமிழர் ஒருவரை துணை முதல்வர் ஆக்குங்கள் பார்க்கலாம்


G Mahalingam
ஆக 19, 2025 17:12

தமிழ் நாட்ட மக்கள் குறைந்தது 10 பேரையாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கினால் பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யலாம். 0 வைத்து கொண்டு எப்படி பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத முடியும். மற்ற மாநிலத்தவர் கேள்வி கேட்க மாட்டார்களா. தமிழ் நாட்டில் 40 பேர் இருந்தும் இதுவரை தொகுதிக்கு என்ன செய்தார்கள். ஒரு ஆனியும் புடுங்க வில்லை.


kamal 00
ஆக 19, 2025 20:20

முதலில் உங்க முதல்வர் பேர் தூய தமிழ் போல... பேர மாத்து இல்லை ஊரை மாத்து


kamal 00
ஆக 19, 2025 20:21

அங்க போய் உதயநிதி வாழ்க ன்னு சொன்னது தான் சாதனை


இராம தாசன்
ஆக 19, 2025 20:42

ஐயா காமராஜர் விட்டு கொடுத்தால் வந்த வினை.. அவர் மட்டும் பதவி ஏற்று இருந்தால் நாடும் நன்றாக இருந்து இருக்கும் / முன்னேன்றம் அடைந்து இருக்கும்


S.L.Narasimman
ஆக 19, 2025 13:23

ஐயா ராதாகிருட்ணன் எங்கே. ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை