உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலா வழக்கில் சின்னையாவை டில்லியில் சந்தித்தது யார்?

தர்மஸ்தலா வழக்கில் சின்னையாவை டில்லியில் சந்தித்தது யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: தர்மஸ்தலாவில் இருந்து மண்டை ஓடுகளை டில்லிக்கு எடுத்து சென்றதாக, கைதான சின்னையா 'பகீர்' வாக்குமூலம் அளித்து உள்ளார். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. இந்த வழக்கில் பொய் புகார் அளித்த மாண்டியாவின் சிக்கப்பள்ளி கிராமத்தின் சின்னையா, 53, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து எஸ்.ஐ.டி., போலீசார் கூறியதாவது: தமிழகத்தில் இருந்த சின்னையாவை, ஒரு கும்பல் தர்மஸ்தலாவுக்கு அழைத்து வந்து, போலியாரு வனப்பகுதியில் ஒரு மண்டை ஓடு, சில எலும்பு கூடுகளை புதைத்து உள்ளது. இன்னொரு மண்டை ஓடு, எலும்புக் கூடுகளுடன் தர்மஸ்தலாவில் இருந்து டில்லிக்கு, சின்னையாவை காரிலேயே அழைத்து சென்று உள்ளது. டில்லியில் ஒருவரை சந்தித்து உள்ளனர். அவர், சின்னையாவிடம் நீதிமன்றத்தில் எப்படி பேச வேண்டும்; போலீசார் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுத்து உள்ளார். பின், சின்னையாவை டில்லியில் இருந்து தர்மஸ்தலாவுக்கு அழைத்து வந்து புகார் அளிக்க வைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுபோல தர்மஸ்தலா சென்று மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, பொய் புகார் அளித்த சுஜாதா பட்டையும், வரும் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

G Mahalingam
ஆக 25, 2025 07:58

இதை கோர்ட் தானாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவுயிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் மூடி மறைத்து விடுவார்கள். இதில் வெளிநாட்டு பணம் பூந்து விளையாடி இருக்கும்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 25, 2025 07:55

அது ரிசர்வ் பரஸ்ட்டா இல்லையா ரிசர்வ் பராஸ்ட்டில் எது வேணும் என்றாலும் செய்யலாமா அங்குள்ள மண் ஆசிட் கலந்ததா இல்லையா எதற்கு கேக் ஆர்டர் பெற்றார்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் ஆர்டிஐ வாயிலாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிவேடுகள் எரிக்கப்பட்டதாக கூறியுள்ளனரா இல்லையா ஊடகம் இதனையும் ஊடக தர்மம் இருந்தால் கேளு


N.Purushothaman
ஆக 25, 2025 06:40

இயக்கியது யார் மற்றும் அவர்களின் நோக்கம் பின்னணி எல்லாவற்றையும் தோண்டி துறவி எடுத்து சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் .


Chess Player
ஆக 25, 2025 06:07

எங்கெல்லாம் மதம் மாற்றம் செய்வது கடினமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த மாதிரி பொய் பிரச்சாரம் கிளம்புகிறது. ஹிந்துக்கள் இங்கெல்லாம் மதம் மாற முடியாது என்று ஒத்துமையுடன் இருந்தால் மாற்றுவது கடினமாக இருக்கிறது. அதனால், கோயில்கள் பேரை கெடுத்தால் தான் அதை காட்டி மாற்ற முடியும். இல்லை என்றால் இவ்வளவு காசு கொடுத்து, எவ்வளவு வேலை ஏன் செய்கிறார்கள்? ஈஷா , தர்மஸ்தலா, மற்றும் பல கோயில்கள் தெற்க்கே தர்மஸ்தலா கோயிலை மிக அருமையாக நிர்வகிக்கின்றனர் அந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்.


Kasimani Baskaran
ஆக 25, 2025 04:05

தீம்க்கா சசிகாந்த் செந்தில் என்பவரை குத்தகைக்கு எடுத்து இருக்கிறது. அவர் இதன் சூத்திரதாரி.


sankar
ஆக 25, 2025 05:38

சசிகாந்த் செந்தில் அவரு எப்புடி இதில் சம்பந்த பட்டர் வதந்தியா இல்லை உண்மையா ??????


SUBBU,MADURAI
ஆக 25, 2025 03:36

பட்டியல் வகுப்பை சேர்ந்த தமிழக காங்கிரஸ் எம்.பி...


நிக்கோல்தாம்சன்
ஆக 25, 2025 03:28

எங்கே நமது youtube சேனல்கள் , தமிழ் பொக்கிஷம் , மாயோன் போன்ற சேனல்களின் ரீடர்கள் இப்போ வருத்தம்/மன்னிப்பு தெரிவிப்பார்களா ?


சிட்டுக்குருவி
ஆக 25, 2025 00:46

டில்லிக்கு அழைத்துச்சென்றார்கள் என்றால் வழியில் ஹோட்டலில் தங்கி இருக்கவேண்டும் .ஹோட்டலில் பதிவு கேமரா பதிவுகள் இருக்கும் .பிடிப்பது சுலபம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை