உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகத்தில் உள்ள உதாரணங்களை அமெரிக்கா ஏன் பார்க்கவில்லை?

உலகத்தில் உள்ள உதாரணங்களை அமெரிக்கா ஏன் பார்க்கவில்லை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் விமர்சனத்துக்கு பதிலளித்த, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ''உலகத்தில் இதுபோன்ற பல உதாரணங்கள் இருப்பதை அமெரிக்கா ஏன் பார்க்கவில்லை,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அமெரிக்கா, இதற்கு கவலை தெரிவித்தது.

நடவடிக்கை

இது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை கூர்ந்து கவனிக்க உள்ளதாக கூறியுள்ளது.இதற்கிடையே, அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்வதற்கு இந்தியர் ஒருவர் சதி செய்ததாகவும், இதனால், இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என்றும், இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி கூறியிருந்தார்.புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்களின் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:இந்தியாவையும், கனடாவையும் அமெரிக்கா ஒன்றாக பார்க்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கனடா எப்படி ஆதரவாக இருக்கிறது என்பது தெரியும். ஆனால், அதை மறந்து விட்டு பேசுவது அமெரிக்காவுக்கு முறையல்ல. நாங்கள் ஒவ்வொரு நாட்டையும் தனித்தனியாகவே பார்க்கிறோம்.அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக, திட்டமிட்ட குற்றக்குழுக்கள் செயல்பட்டுள்ளது தீவிரமான பிரச்னை. பிரச்னை என்னவென்று பார்க்க வேண்டும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.குடியுரிமை திருத்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார். உங்கள் நாட்டுக்கு என, சில கொள்கைகள் இருக்கலாம். அதுபோல எங்களுக்கும் உள்ளது. நான் உங்கள் கொள்கை குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால், வரலாறு தெரியாமல் பேசக் கூடாது.

பிரச்னை

இந்தியாவில் பிரிவினை ஏற்படவில்லை என்பது போலவும், அதன்பின் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பது போலவும் பேசுகின்றனர்.இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது, பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்தவர்களுக்கு நம் தலைவர்கள் சில வாக்குறுதிகளை அளித்தனர். பிரச்னை ஏற்பட்டால், திரும்பி வந்தால் ஏற்பதாக கூறப்பட்டது.ஆனால், இதற்கு முன் இருந்தவர்கள் அதை செய்யவில்லை.தற்போது நாங்கள் செய்கிறோம். இதுபோல, குடியுரிமை அளிக்கப்பட்டது தொடர்பாக, இந்த உலகில் பல உதாரணங்கள் உள்ளன. அவையெல்லாம் ஏன், இவர்களுடைய கண்களுக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 10:08

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் நம் நாட்டின் பொக்கிஷம் ......


பேசும் தமிழன்
மார் 18, 2024 07:53

யாருக்கு உண்மையிலேயே ஆதரவு தேவையோ அவர்களுக்கு இந்தியா ஆதரவு கொடுக்கும்.... அதை விடுத்து.... வரும் ஆட்கள் அனைவருக்கும்.... நாட்டின் பிரஜை என்று உரிமை கொடுக்க... இது ஒன்றும் ஆண்டி மடம் இல்லை..... வேண்டுமானால் அமெரிக்கா.... அனைவருக்கும் அமெரிக்க பிரஜை என்ற அந்தஸ்து கொடுக்கலாமே.... நீங்கள் அண்டை நாடுகளின் எல்லையில் சுவர் எழுப்புவது ஏன் ???


பேசும் தமிழன்
மார் 18, 2024 07:46

நாடு பிரிவினையின் போது... பாகிஸ்தான் நாட்டில் 10 சதவீதம் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று 1 சதவீதம் அளவுக்கு குறைவாக மாறி விட்டார்கள்... பங்களாதேஷ் நாட்டில் 30 சதவீதம் இருந்த இந்துக்கள்.... இப்போது 5 சதவீதம்.... அதற்க்கும் குறைவான அளவுக்கு மாறி விட்டார்கள்.... ஆனால் இந்தியாவில் 8 சதவீதம் இருந்த முஸ்லீம்கள்... இன்று 20 சதவீதம் அளவுக்கு மாறி விட்டார்கள்.... இப்போது சொல்லுங்கள்.... எந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் அமைதியாக..... நிம்மதியாக இருக்கிறார்கள் ???


Sankar Ramu
மார் 18, 2024 07:00

அமெரிக்காவில் ஏன் மெக்ஸிகோ பார்டரில் சுவர் அமைத்து வருபவர்களை தடுக்கின்றனர்? இங்க ஊளையிடுகிறார்கள்.


Ramesh Sargam
மார் 18, 2024 05:58

இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவிற்கும் வயிற்று எரிச்சல்.


Ram
மார் 18, 2024 08:36

..............


Mohan
மார் 18, 2024 00:28

நேராக பேசும் திரு. ஜெய்சங்கர் அவர்கள் மற்ற நாடுகள் செயல்படுவதையும் பாருங்கள் - எங்களது செயல்பாடுகளையும் கவனிக்க கோருகிறார்.. மற்ற நாடுகள் எது செய்தாலும் சரி எனவும் இந்தியா மற்ற வளர்ந்த நாடுகள் போல செய்தால் கூட ஏன் இவ்வாறு செய்ய வேணடும என கேள்வி எழுப்ப தயாராக உள்ளன அமெரிக்க ஆடசியாளர்கள் என்ன கேப்மாரித்தனமாக கேள்விக்கு பதல் சொல்றாங்க.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை