உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்டாசுக்கு டில்லியில் மட்டும் தடை ஏன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

பட்டாசுக்கு டில்லியில் மட்டும் தடை ஏன்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

'காற்று மாசு காரணமாக பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்றால், நாடு முழுதும் தான் அதை தடை செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். என்.சி.ஆர்., எனப்படும், தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து, கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. காற்று மாசு இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:

ஒரு விவகாரத்தில் ஒரு கொள்கை கொண்டுவரப் படுகிறது என்றால், அது நாடு முழுதும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும். தலைநகர் டில்லிக்கு மட்டும் ஒரு தனிக் கொள்கை மற்ற பகுதிகளுக்கு வேறு கொள்கை என்றெல்லாம் இருக்கக் கூடாது, இருக்க முடியாது. ஏனென்றால், மற்ற பகுதி களை சேர்ந்த மக்கள் எப்படி இந்திய குடிமக்களோ அதேபோலத்தான் டில்லியை சேர்ந்தவர்களும். எனவே பட்டாசு வெடிக்க தடை கேட்கும் நபர்கள் ஏன் அதற்காக நாடு முழுதும் தடை கேட்பதில்லை? மேலும், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என சிலர் வாதங்களை முன் வைக்கின்றனர். கடந்த ஆண்டு குளிர்காலத்தின் போது பஞ்சாப் சென்றிருந்தேன். அங்கு டில்லியை விட காற்று மாசு மிகவும் மோசமாக இருந்தது.

விசாரணை

மத்திய காற்று தர மேலாண்மை ஆணையத்திடமிருந்து இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் அறிக்கை பெற்று தர உத்தரவிடுகிறேன். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை வரும் 22க்கு பட்டியலிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். வரும் அக்டோபர் 20ல் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு முன்பாகவே இந்த வழக்கை விசாரிக்க உள்ளது முக்கிய கவனம் பெற்றுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
செப் 13, 2025 09:25

ஒரே சீருடை அணிந்து வேலை செய்ய இந்தியக் காவலர்களிடையே சட்டம் கொண்டு வர இயலுமா சாமி. .


Saai Sundharamurthy AVK
செப் 13, 2025 08:38

நல்ல யோசனை தான். அப்படியே குடும்ப அரசியலையும் ஒழித்து விடலாம்.


Sun
செப் 13, 2025 08:16

எனக்கு ஒரு இடையூறு என்றால் எனக்கு மட்டும்தான் நான் கேட்பேன். ஊருக்கெல்லாமா கேட்பேன்? டெல்லிக்கு தடை கேட்டால் டெல்லிக்கு சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே? நாடு முழுவதும் என்று இவராக எதுக்கு ஒரு புதுப் பிரச்சனையை கிளப்புகிறார்? பண்டிகை நெருங்கும் வேளையில் இவராக ஒரு புதுப் பிரச்சனையை திடீரென கையில் எடுப்பது பட்டாசு தொழிலை மட்டுமே நம்பியுள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள், கோடிக் கணக்கான முதலீடு செய்துள்ள உரிமையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாதா? ஏற்கெனவே பட்டாசு வெடிக்கத்தான் நேரக் கட்டுப் பாடு உள்ளதே? இவர் நியாயமான தலைமை நீதிபதி என்றால் என்ன கேட்டிருக்க வேண்டும்? பண்டிகை அன்று ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால்தான் டெல்லியின் மாசு கெட்டுப் போகிறதா? டெல்லியை ஒட்டியுள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வருடம் முழுவதும் விவசாய கழிவுகள் எரிக்கப் படுகிறதே? அதனால் டெல்லியில் காற்று மாசு ஏற்படாதா? அதனையும் வழக்கில் சேருங்கள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?


Ramona
செப் 13, 2025 08:06

ஏனென்றால் இங்கு அமைதி மார்க தலைவர்கள் ,கோடி பேர்கள், வங்க தேச அமைதி மார்க சகோதர சகோதரிகள், இறைதூதர்கள், வாழும் சொகுசு வாழ்க்கைக்கு பங்கம் வந்துவிட கூடாது அல்லவா,


GMM
செப் 13, 2025 07:02

தீபாவளி ஒரு நாள். பட்டாசு விவகாரத்தில் ஒரு கொள்கை என்றால், அது இந்தியா முழுவதும் இருக்க வேண்டும். தலைநகர் டில்லிக்கு மட்டும் ஒரு தனிக் கொள்கை வகுக்க கூடாது. நீதிபதியின் சரியான சட்ட பார்வை, கருத்து. இது போல் நாடு முழுவதும் மும்மொழி கொள்கை, இட ஒதுக்கீடு உச்ச வரம்பு, பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு போன்றவற்றில் தமிழகம் தனி கொள்கை வகுப்பதை உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும்


சாமானியன்
செப் 13, 2025 06:14

நீதிபதியின் கருத்தை சரி என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் நஷ்டமடைவதை நீதிபதி விரும்புகிறாரா ? நாடு பூரா எல்லா இடங்களிலும் காற்று மாசு அடைவதில்லை. மக்கட்தொகை மிகுந்த பெரு நகரங்கள் மட்டுமே மாசு அடைகின்றன. அதிலும் குறிப்பாக கடல் காற்று மாசுவை விரட்டுவதும் உண்மை. சீனாவிலிருந்து பட்டாசுகள் இறக்குமதி தடை செய்யனும். இரண்டு நாட்கள் பெரு நகரங்களில் மட்டும் பட்டாசு வெடிப்பதை நேரக்கட்டுப்பாடு விதிக்கலாம். அந்தந்த மாநில முதல்வர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.


சூர்யா
செப் 13, 2025 05:02

ஒரு விசயத்தில் ஒரு கொள்கை என்றால் அதை நாடு முழுவதும்தான் கொண்டு வர வேண்டும். சரிதான். அப்புறம் எதற்கு நாட்டில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித் தனி சட்டம். அதையும் நாடு முழுவதையும் ஒன்றாகவே கொண்டு வர வேண்டியதுதானே?


visu
செப் 13, 2025 04:23

எஸ் யுவர் ஹனோர் நாய்கள் மட்டுமே விலங்குகளோ என்ன இந்த ஆடு மாடு கோழி எல்லாம் தினந்தோறும் உணவுக்காக கொல்லப்படுவதை தடை செய்து விடுங்க வேறே வேற கொளகை கூடாது


சமீபத்திய செய்தி