உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ஆட்சியில் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை: நட்டா குற்றச்சாட்டு

காங்., ஆட்சியில் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை: நட்டா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காயத்ரி பரிவார் சார்பில் இன்று(பிப்.,22) நடைபெற்ற அஸ்வமேத காயத்ரி மகாயக்ஞத்தில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பங்கேற்றார். பின்னர் மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அவர்கள் ஏழைகளின் நலனுக்காக ஏதும் செய்யவில்லை. இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., பார்க்கப்படுகிறது. எங்கள் பொறுப்பும் அதிகரித்துள்ளது. இருளில் இருந்து ஒளியை அடைந்துள்ளோம்.ஒரு காலத்தில் நாட்டில் 5 முதல் 6 அரசுகளை அமைத்து திருப்தி அடைந்தோம். இன்று 17 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இன்று மோடி அரசு ஏழைகளுக்கும், பெண்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது. மஹாராஷ்டிராவில் ஊழல் நடந்ததா இல்லையா?. உத்தவ் ஆட்சியில் ஊழல் நடந்ததா இல்லையா? மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் சிறையில் இருந்தாரா இல்லையா? டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையை கண்டு ஏன் பயப்படுகிறார்?. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

g.s,rajan
பிப் 23, 2024 10:59

எல்லாத்துக்கும் நேரு தான் காரணம் ....


rameshkumar natarajan
பிப் 23, 2024 09:46

If he doesn't know he should get educated. 100 days rural development scheme was brought by Congress. Fund for that scheme was reduced by BJP. Concession in railway train tickets is almost abolished by BJP. Senior citizens of this country will teach a fitting leason to BJP.


அப்புசாமி
பிப் 23, 2024 07:48

அவிங்க ஒண்ணும் செய்யலைன்னு கண்டுபுடிச்சு சொல்லவே பத்து வருஷமா ஆட்சியில் இருக்கோம் ஹை. நானும் ரெண்டாவது முறையே ராஜ்யசபா எம்.பி ஆயிட்டேன் ஹை. எய்ம்ஸ் வேலை 99.99 முடின்ஹ்சிடிச்சு ஹைன்.


Ramesh Sargam
பிப் 23, 2024 00:02

அவர்கள் ஆட்சியில் அதிக ஏழைகளை உருவாக்கியதே அவர்கள் செய்த பெரும் சாதனை (சோதனை)


Narayanan Muthu
பிப் 23, 2024 08:07

நாட்டு நடப்பு தெரியாத சங்கதிகளை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இலவச அரிசி நுகர்வோர் இருமடங்காக உயர்த்தி ஏழைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதே பாஜகவின் சாதனை என்பதை அறியாத இந்த சங்கியை என்னவென்று சொல்ல


g.s,rajan
பிப் 22, 2024 21:58

இப்படி தொட்டத்துக்கு எல்லாம் காங்கிரஸ் கட்சியைக் குறை சொல்லிக்கிட்டே இருந்தா எல்லாம் சரியாய்ப் போய்விடுமா..???,உங்களை மக்கள் எதற்காகத் தேர்ந்து எடுத்தார்கள் ...???


Narayanan Muthu
பிப் 22, 2024 21:18

இந்த நடடாவுக்கு அம்னீஷியா வியாதி இருக்குமோ. உளறல் சிகரம்


g.s,rajan
பிப் 22, 2024 20:03

பி.ஜே.பி கட்சி மாதிரி இந்தியாவில் நடுத்தர மக்களுக்கும் ,ஏழைகளுக்கும் யாராலும் இதற்கு மேல் நன்மை செய்ய முடியவே முடியாது.,இந்தப் பத்து வருடத்தில் சும்மா வெச்சு செஞ்சு இருக்கீங்க.....


MADHAVAN
பிப் 22, 2024 19:22

இந்த பத்துவருஷத்துல நீங்க என்ன செஞ்சீங்க ?


Apposthalan samlin
பிப் 22, 2024 18:07

ஏழைகளுக்கு என்ன செய்தது ?


அப்புசாமி
பிப் 22, 2024 17:53

நாங்கதான் நாப்பது கோடியா இருந்த ரேசன் அட்டைகளை 80 கோடியாக்கி நல்லது செஞ்சிருக்கோம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை