மேலும் செய்திகள்
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
2 hour(s) ago | 5
ராஞ்சி: 'விவசாயிகளின் கடனை ஏன் பா.ஜ., தள்ளுபடி செய்யவில்லை?' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் இன்று(பிப்.,03) காங்., எம்.பி ராகுல் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டார். அப்போது ராகுல் பேசியதாவது: அதானி போன்ற தொழில் அதிபரின் கோடிக்கணக்கான கடன்களை பா.ஜ., அரசு தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை?. விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள்?. நாட்டில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மட்டுமே அநீதி நடக்கிறது. இந்தியாவில் வாழும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை துவங்குவோம். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நாடு முழுவதும் வெறுப்புணர்வை பரப்புகிறது. காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எவ்வளவு வெறுப்பைப் பரப்பினாலும் அன்பு கடையை திறக்கும். இவ்வாறு ராகுல் பேசினார். வழிபாடு
ஜார்க்கண்டில் உள்ள வைத்தியநாதர் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் வழிபாடு நடத்தினார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
2 hour(s) ago | 5