உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தாங்க.. ரூ.100! பிரதமர் மோடிகிட்ட குடுத்துடுங்க! வைரல் ஆனது பழங்குடியின பெண் செயல்

இந்தாங்க.. ரூ.100! பிரதமர் மோடிகிட்ட குடுத்துடுங்க! வைரல் ஆனது பழங்குடியின பெண் செயல்

புவனேஸ்வர்; ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.100 அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஒடிசாவில் உள்ள சுந்தர்கர்க் மாவட்டத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு சிவப்பு நிற ஆடை அணிந்தபடி, பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார். உறுப்பினர் சேர்க்கை முகாமில் நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில பா.ஜ., துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய்பாண்டாவிடம் சென்றுள்ளார். தாம் கையில் வைத்திருந்த 100 ரூபாயை அவரிடம் தந்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி, அவரிடம் இந்த ரூ.100ஐ வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.பழங்குடியின பெண்ணின் இந்த செயலைக் கண்டு வியந்த பைஜெயந்த் ஜெய் பாண்டா இந்நிகழ்வை தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் விரிவாக பதிவிட்டு உள்ளார். பழங்குடியின பெண் ரூ.100 தரும் போட்டோவையும் அதில் வெளியிட்டு இருக்கிறார்.தமது எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறி இருப்பதாவது; ஒடிசா சுந்தர்கர்க் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ஒடிசா ஆதிவாசிப் பெண் ஒருவர் 100 ரூபாயை பிரதமரிடம் தருமாறு கூறினார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் கூறுமாறு தெரிவித்தார்.அந்த பணத்தை நான் வேண்டாம் என்று கூறி விளக்கினேன். ஆனால் அப்பெண்மணி அதை மறுத்துவிட்டார். பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவே இல்லை. இதுதான் ஒடிசா மற்றும் பாரதம் உணரும் மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஜெய் ஜெகன்நாத் என்று பதிவிட்டுள்ளார். பைஜெயந்த் ஜெய்பாண்டாவின் வலைதள பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது:இந்த அன்பு என் உள்ளத்தை நெகிழ செய்துவிட்டது. எப்போதும் ஆசிர்வதிக்கும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். உங்களின் ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு தருகிறது.இவ்வாறு தமது பதிவில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

INDIAN
அக் 25, 2024 11:40

பழங்குடியின பெண் பிரதமருக்கு நன்றி கூறியிருப்பதாக செய்தி இருக்கிறது, எதற்க்காக நன்றியென்பது தெரியவில்லை, பிரதமருக்கு 100 ரூபாய் கொடுத்திருக்கிறார் என்பதும் எதற்க்கென்று புரியவில்லை? தயவு செய்து யாருக்காவது புரிந்தால் தெரியப்படுத்தவும்


M Ramachandran
அக் 25, 2024 10:10

உடனேயே ராவுளும் போட்டோ ஸூட் ஏர்ப்பாடு பண்ணி ஜால்லரா ஊடகங்களுக்கு மூஞ்சியை காட்டுவார்.


A.C.VALLIAPPAN
அக் 23, 2024 10:12

உனது மனது அவலம்


Mohamed Ibrahim
அக் 21, 2024 22:33

பிரதமருக்கே லஞ்சமா??


Raja
அக் 20, 2024 20:21

மோடியின் அயராத உழைப்பு தேசபக்தி இவையெல்லாம் மூர்க்கர்களுக்கு புரியாது. மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்.


Ramesh Sargam
அக் 20, 2024 19:50

மற்றவர்களுக்கு அது வெறும் நூறு ரூபாயாகத்தான் தெரியும். ஆனால் அந்த ஆதிவாசிப்பெண்ணுக்கு அது பல ஆயிரம் மதிப்பு. குசேலன், பகவான் கண்ணனுக்கு வெறும் அவுல்தான் கொடுத்தான். ஆனால் அந்த பகவான் அந்த அவுலை மிகவும் ருசித்து புசித்தார். அதுபோல மோடிஜியும்...


புதிய வீடியோ