மேலும் செய்திகள்
குடும்பத் தகராறில் தம்பதி துாக்கு போட்டு தற்கொலை
19-Nov-2024
பைக் மீது கார் மோதல்
21-Nov-2024
மைசூரு,: குடும்ப பிரச்னையால், காதலித்து திருமணம் செய்த மனைவியின் கழுத்து அறுத்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.மைசூரை சேர்ந்தவர்கள் மனு - ஸ்ருதி. இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. சில முறை குடும்பத்தின் பெரியவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து, சேர்த்து வைப்பர்; மீண்டும் சண்டை போடுவர், சேர்ந்து கொள்வர். இதுபோன்று இம்மாதம் 3ம் தேதி இரவு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலையில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனு, ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.அவர் அளித்த தகவலின்படி, அவர்களின் வீட்டுக்கு சென்ற போலீசார், ஸ்ருதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ருதியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, மனுவை கைது செய்தனர்.படம்: ஸ்ருதி, மனு
19-Nov-2024
21-Nov-2024