உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமைச் செயலாளராக கணவருக்கு பின் மனைவி; நாட்டில் இது 3ம் முறை!

தலைமைச் செயலாளராக கணவருக்கு பின் மனைவி; நாட்டில் இது 3ம் முறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளா மாநில தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெறும் வேணுவுக்கு பதிலாக, அவரது மனைவியும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சாரதா, தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., தம்பதி, அடுத்தடுத்து தலைமைச் செயலாளராக பதவி வகிப்பது, நாட்டில் இது மூன்றாம் முறை.

ஒப்புதல்

முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று (ஆக.,21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய தலைமைச் செயலர் வி.வேணு வரும் ஆக.,31ம் தேதியுடன் ஓய்வுபெற இருப்பதால், புதிய தலைமை செயலரை நியமிப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டது. அப்போது, சாரதா முரளிதரனை அடுத்த தலைமை செயலாளராக நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யார் இந்த சாரதா?

ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சாரதா முரளிதரன், தற்போது ஓய்வு பெற இருக்கும் தலைமை செயலர் வி.வேணுவின் மனைவி ஆவார். இவரும் மத்திய, மாநில அரசுகளின் பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

அனுபவம்

1990ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற இவர், தற்போது கேரள அரசின் உள்ளாட்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வருகிறார். 2006-2012ம் ஆண்டு குடும்பஸ்ரீ திட்டத்தின் தலைமை அதிகாரி இருந்து, தனது திறமையை வெளிப்படுத்தினார். அதேபோல, மத்திய அரசின்தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை அதிகாரியாகவும் இருந்தார். பஞ்சாயத்து ராஜ் துறையின் இணை செயலாளராக இருந்து கிராமப் பஞ்சாயத்து திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றார். அதுமட்டுமில்லாமல், பட்டியலின மக்களின் வளர்ச்சி துறைக்கான இயக்குநர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

3வது முறை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இது போன்று முதல் முறையாக நடந்தது. அந்த மாநில தலைமை செயலாளராக பதவி வகித்த மனோஜ் சவுனிக் டிசம்பரில் ஓய்வு பெற்ற நிலையில், அவரது மனைவி சுஜாதா இந்தாண்டு ஜூன் மாதம் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார். அடுத்தபடியாக, கர்நாடகாவில், ரஜ்னீஷ் கோயலை தொடர்ந்து அவரது மனைவி ஷாலினி ரஜ்னீஷ் தலைமை செயலாளராக பொறுப்பேற்ற நிகழ்வு நடந்தது. மூன்றாவது மாநிலமாக, கேரளாவிலும் இது நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Balaji Kannan
ஆக 23, 2024 21:47

G00d


Balakrishnan P
ஆக 23, 2024 14:05

லட்சுமி ப்ரனேஷ் முன் எம் .பி.ப்ரனேஷ் இந்த தமிழ்நாட்டில்


Balakrishnan P
ஆக 23, 2024 14:01

Tamilnadu MB pranesh was followed by லட்சுமி Pranesh


எஸ் எஸ்
ஆக 22, 2024 13:25

இது நான்காவது முறை. 35 ஆண்டுகள் முன்பே இதே கேரளாவில் ராமச்சந்திரன் என்ற அதிகாரி தலைமை செயலராக இருந்து ஓய்வு பெற்ற பின் அவர் மனைவி பத்மா ராமச்சந்திரன் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். ராமச்சந்திரன் பின்பு 1991 இல் தமிழ்நாடு கவர்னரின் ஆலோசகராக இருந்தார்


Nagasamy
ஆக 22, 2024 13:08

Kerala state already had a couple as CS. Mr. V. Ramachandran and his wife Mrs. Padma had served as CS in Govt. of Kerala.


S.Bala
ஆக 22, 2024 09:53

இண்டி கூட்டணி எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே


Thiagarajan Anandapadmanaban
ஆக 22, 2024 09:27

In another important case similar happened in Karnataka State few years ago Bhattajee couple both became Chief Secretarys of the State This Male Chief Secretary suggested capping of pension of Central Government Servants upto 73 yrs and stoppage thereafter before 7th Pay Commission.Fortunately Pay Commission and CG ignored his views


S Sivakumar
ஆக 22, 2024 07:58

இதை பார்த்தா தலைமுறை தலைமுறையாக இந்த விசயத்தில் மட்டும் தேவை இல்லை


Barakat Ali
ஆக 22, 2024 07:54

பதவிக்கேற்ற திறமை, நேர்மை இருக்கிறது என்றால் தவறில்லை ..... வேறு பின்னணி - அதாவது வசூலில் கணவர் காட்டிய திறமை குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள, பழக்கப்பட்டுள்ள மனைவி அதே பாதையில் சிறப்புடன் பயணிப்பது - பேரவலம் .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை