உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோவா?: வைரலாகும் புகைப்படம்

பிரதமரின் பாதுகாப்புக்கு பெண் கமாண்டோவா?: வைரலாகும் புகைப்படம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் பெண் கமாண்டோ ஒருவர் பிரதமருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களின் வைரலாகி வருகிறது.நாட்டில், பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கியுள்ள குடும்பத்தினருக்கு, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள், உயரடுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இவர்கள் பிரதமர் எங்கு சென்றாலும் நிழல் போல் இருப்பர்.எஸ்.பி.ஜி. படையில் துணை ராணுவத்தினர், சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுதப்படை பிரிவினர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில சிறப்பு போலீஸ் படையினர் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவில் இருந்து சிறப்பாக பணிபுரிவோர் தக்க பயிற்சி பெற்று பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.இந்நிலையில் பிரதமரின் எஸ்.பி.ஜி., பாதுகாப்புபடையில் முதன்முறையாக பெண் கமாண்டோ நியமிக்கப்பட்டு பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பா.ஜ., லோக்சபா எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான கங்கா ரணாவத் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அது வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது 100 பெண் கமாண்டோக்கள் உள்ளனர். பாராளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் பங்கேற்க வந்த போது பெண் கமாண்டோ பாதுகாப்பு பணியில் இருந்தார். அந்த புகைபடம் தான் வைரலாகி வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kasimani Baskaran
நவ 29, 2024 06:42

கருத்து என்ற பெயரில் திராவிட சமூக தீவிரவாதிகள் தேசவிரோத கருத்துக்களை அள்ளி விடுவதில் சூரர்கள். அவர்கள் கட்சியில் பழத்தை எப்படி ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள் என்பதை உலகம் நன்கு அறியும்.


karupanasamy
நவ 29, 2024 05:26

உன் சிந்தனை கயவனின் பேரனின் சிந்தனைக்கு ஈடாகத்தான் இருக்கு.


Senthoora
நவ 29, 2024 04:53

உங்களுக்கு உங்கமேலே நம்பிக்கை இல்லையா? பெண்களும் ஆண்களுக்கு சமமாக இருக்கிறாங்க என்று சொல்லுங்க.


J.V. Iyer
நவ 29, 2024 04:37

அருமை. என்ன செய்ய முடியாது பெண்களால்? பாரதி கண்ட புதுமைப்பெண்கள் இப்படியும் பெருமை சேர்க்கிறார்கள்.


Barakat Ali
நவ 28, 2024 22:15

பெண் கமாண்டோ என்றாலும் பயிற்சி பெற்றவராகவே இருப்பார் ....


கிஜன்
நவ 28, 2024 22:09

ஆண்களை விட ...எல்லா துறையிலும் பெண்கள் சிறப்பாக செயல்படுவார்கள் ...


வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 21:13

hari : It is clearlt evident that you can talk, walk even while sleep, you are owned by DMK. Without correcting DMK thou cant live. I appreciate the power of DMK to rule your mind.


hari
நவ 29, 2024 09:41

congratulations, you are the winner for best joker for today....hope you got rs200....enjoy


ghee
நவ 29, 2024 09:42

you are the best slave for DMK


hari
நவ 29, 2024 09:45

you have limited knowledge...can't improve


Rasheel
நவ 28, 2024 21:12

தினமலர் சொல் வழக்குப்படி மர்ம நபர்களால் பெண் தீவிரவாதமும் அதிகரித்து வருகிறது


gayathri
நவ 29, 2024 09:32

அதனால் கூட இருக்கலாம்.


HoneyBee
நவ 28, 2024 20:42

எப்பவுமே குற்றம் தானா. அமெரிக்காவில் போய் நம் நாட்டை கேவலமாக பேசும் கோஷ்டிகளுக்கு... நல்லதை நினை..


வைகுண்டேஸ்வரன்
நவ 28, 2024 20:08

ஜி யின் முகத்தைப் பார்த்தால் பழைய சுறுசுறுப்பு காணோம்??


hari
நவ 28, 2024 20:39

உன் கட்டுமர தலைவரை விட பெட்டர் தான்


சமீபத்திய செய்தி