உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டில் தீப்பிடித்து பெண் பலி

வீட்டில் தீப்பிடித்து பெண் பலி

புதுடில்லி:வட கிழக்கு டில்லி, நியூ உஸ்மான்பூர் பகத்சிங் காலனியில் வசிக்கும் மஞ்சு ஜெயின், 40, வீட்டில் நேற்று காலை, 7:00 மணிக்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், வீட்டுக்குள் சிக்கித் தவித்த மஞ்சுவை காயங்களுடன் மீட்டு, அருகில் உள்ள ஜெகபிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், மஞ்சு ஜெயின் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, நியூஉஸ்மான்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை