உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட்

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கொச்சியில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்சுக்கு வழி விடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்ணின் லைசென்ஸ் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.கொச்சி கலூரில் நோயாளியுடன் ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. அதன் முன்னால் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த பெண் சைரன் சத்தம் கேட்டும் வழி விடாமல் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இதை ஆம்புலன்சின் முன் பக்கம் இருந்தவர் வீடியோவாக பதிவு செய்தார்.பாலாரி வட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வண்டி பதிவு எண் அடிப்படையில் அதை ஓட்டியது கொச்சியில் வசிக்கும் கஸ்தூரி என தெரியவந்தது. அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, லைசென்சும் ஆறு மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதற்கிடையில் தனது படத்துடன் கூடிய வீடியோ காட்சியை தனது அனுமதி இல்லாமல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலாரிவட்டம் போலீசில் கஸ்துாரியும் புகார் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி