உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை எனவும், இதற்காக ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.மும்பையில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் மற்றும் பொருளாதார மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வங்கிகள் அமைப்பு சார்ந்த கடன் நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். நிதி கட்டுப்பாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.நாம் பின்பற்ற வேண்டிய பல சுயசார்பு நடவடிக்கைகள் இன்னும் உள்ளன. அனைவருக்கும் நிதி சேவை கிடைக்கச் செய்வது என்பது வளர்ந்த பாரதத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். இதனை வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் வெற்றிகரமாக செய்து வருகின்றன.இந்தியாவிற்கு மிகப்பெரிய மற்றும் உலகத் தரம் வாய்ந்த வங்கிகள் தேவை. இதற்காக ரிசர்வ் வங்கிகள் மற்றும் மற்ற நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskaran
நவ 07, 2025 04:38

ஆக இனி வெளிநாட்டு வங்கிகளுக்கு மட்டுமே அரசு ஆதரவு இருக்கும் லாபத்தில்இயங்கும்வங்கிகளை வெளிநாட்டு வங்கிகள் சலிசான விலைக்கு வாங்குவதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் நிதியமைச்சர் உடனே மேற்கொள்வார்.


Nathansamwi
நவ 06, 2025 21:35

அதாவது இருக்குற ரெண்டு மூணு பொதுத்துறையுயியும் தனியார் வசம் கொடுப்போம் னு சொல்ராங்க போல ...


Anantharaman Srinivasan
நவ 06, 2025 20:52

இந்தியாவிற்கு உலகத்தரம் வாய்ந்த வங்கிகள் தேவை : நிர்மலா சீதாராமன் ஆம்.. இந்தியவங்கிகளிலிருந்து அதானிக்கு அள்ளிவிட்டாச்சு. இனி அயல்நாட்டு வங்கிகள் தான்.


pakalavan
நவ 06, 2025 20:47

அம்பானிக்கும் அதானிக்கும் கடன் கொடுக்க வசதியாயிருக்கும்,


M.Sam
நவ 06, 2025 20:24

ஆமாம் இருக்கதாக பின்னே உங்களுக்கு ஒத்துழைக்கும் வாங்கிளல் தானே அம்புட்டு பேரும் நான் தைரியம் தான் கேக்கிறேசன் இது என்ன உங்க ஊறுகாய் காமபின்யா


karan
நவ 06, 2025 19:58

first build a public toilet neatly all over the india. All over the world everyone is laughing


vivek
நவ 06, 2025 20:22

please keep your own house toilet clean Mr karan...


Indian
நவ 07, 2025 00:54

உண்மையை சொன்ன ஏன்பா இவ்வளவு கோபப்படுறா ??. நீ ரொம்ப தான் ஜல்ஸா கட்சிக்கு வக்காலத்து வாங்குறீயே


கடல் நண்டு
நவ 06, 2025 19:47

மாலத்தீவில் உள்ள எஸ்.பி .ஐ , போன்ற வங்கி எங்கும் இல்லை.. இந்தியாவின் ப்ப்பு போல் வெளிநாட்டில் நம் மானத்தை கப்பலேற்ற அரும்பாடு பட்டு வருகிறது..


திகழ்ஓவியன்
நவ 06, 2025 19:42

21 லட்சம் கோடி BADDEBTS / WRITEOFF ஏழைகளின் டெபாசிட் AMOUT , செய்ய உதவினால் தரம் இப்படி தான் இருக்கும்


vivek
நவ 06, 2025 20:23

காங்கிரஸ் பண்ண ஊழல் மறைக்காத திகழ்.....


u
நவ 06, 2025 21:20

200 சார் .ஆனா எப்படி இப்போ எல்லா அரசுத்துறை வங்கிகளும் சூப்பர் லாபத்தில் இயங்குகின்றன? வாராக்கடன் சதவீத அளவும் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை