உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விரைவில் பதவியேற்கவிருக்கும் பிரதமர் மோடிக்கு உலக அளவில் 75 தலைவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். வரும் 8 ம் தேதி நடக்கவிருக்கும் பதவியேற்பு விழாவில் உலக அளவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். 3 வது முறை பிரதமராகும் மோடிக்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ,மேற்காசியா , அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, தென்கொரியா, இந்தோனேஷியா, இத்தாலி, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், உள்ளிட்ட நாட்டு தலைவர்கள் மோடிக்கு தனிப்பட்ட வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ள செய்தியில்: பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். கோடிக்கணக்கான வாக்காளர்கள் ஓட்டளித்த வரலாற்று சாதனை படைத்த தேர்தல். அமெரி்க்கா, இந்தியா நாட்டு நட்புறவு மேலும் வளரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது போல் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பூட்டான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

R.RAMACHANDRAN
ஜூன் 07, 2024 08:28

இத்தோட ஆண்டுகளுக்கு இவர் உலகத்தை சுற்றிவர அந்நிய நாடுகளின் ஆதரவை தேடுகிறார்.


venugopal s
ஜூன் 06, 2024 15:01

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை....


Ramanujadasan
ஜூன் 06, 2024 15:06

திமுகவின் வோட்டு சரிவை சொல்கிறார்


Senthoora
ஜூன் 06, 2024 14:22

முதலில் அவர் பிரதமராக வரட்டும்.


Anantharaman Srinivasan
ஜூன் 06, 2024 13:44

பிரதமர் மோடி பதவியேற்பு என்பது உட்நாட்டு விழா. உலக தலைவர்கள் அழைப்பு எதற்காக..? வீண் செலவு.


Ramanujadasan
ஜூன் 06, 2024 14:31

உங்க வீட்டு கல்யாணத்திற்கு வெளி வீட்டு மக்களை அழைக்க மாட்டிர்களா ?


Rajarajan
ஜூன் 06, 2024 12:15

சரி. இந்தியா சுதந்திரம் பெட்ர அடுத்த இரு ஆண்டுகளிலேயே துவங்கப்பட்ட தி.மு.க. கட்சி, சுமார் இருபது ஆண்டுகள் கழித்து தான் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. எப்படி?? அவர்கள் நேர்மை மற்றும் திறமையை சற்று பின்னோக்கி பாப்போம். ரூபாய்க்கு மூன்று படி அரிசி. ஏழை பங்காளன் காமராஜர் சொகுசு பங்களாவை பாரீர். வெளிநாட்டில் அவருக்கு வங்கியில் பணம் உள்ளது போன்ற தவறான தகவல்கள். அடுக்குமொழி வசனங்கள் / ஆபாச பேச்சுக்கள். நாடக வசனங்கள். முக்கியமாக, பிராமண எதிர்ப்பு. இதை ஏன் செய்தனர் ?? பிராமணரின் அதிகபட்ச வாக்கு என்பது சுமார் பத்து சதவிகிதம். மற்ற பிரிவினர் சுமார் தொண்ணூறு சதவிகிதம். தொண்ணூறை கைப்பற்றி வெற்றி வாகை சூட, அந்த பத்து விகித பிரிவினருடன் மோதவிட்டு, அவர்களால் தான் மற்றவர் முன்னேறவில்லை என்ற மாயபிம்பத்தை கட்டமைத்தனர். விளைவு ? அன்றைய நேர்மையான காமராஜர் தோல்வியை தழுவினார். இதற்க்கு தமிழருக்கு தி.மு.ka. வழங்கிய மாபெரும் பரிசு, சாராயம். பின்னர் கால மாற்றத்தில் இலவசங்கள். பின்னர் கூடுதலாக குவார்ட்டர், பிரியாணி மற்றும் செலவுக்கு பணம். அதுசரி, அரசியல் மற்றும் அரசு ஊழியரால் தான் நாடு அதிக பட்ச வீழ்ச்சியை சந்திக்கிறது அவசியமான துறைகள் மட்டும் மன்னிக்கவும். இவை நிச்சயம் தேவை. அரசியல்வாதிகளுக்கும், அரசு ஊழியருக்கு ஒருமுறை இந்த துறைகளில் நுழைந்து விட்டால், வாழ்வின் கடைசி வரை சம்பளம், பென்ஷன், சலுகைகள், பஞ்சபடி நிச்சயம். எனவே தான் இந்த இரு துறைகளுக்கும் எப்போதுமே சேர போட்டி அதிகம். திறமை / தகுதி / கல்வி தகுதி உயர்வு தேவையே இல்லை. அதுவே தானே உயர்நிலைக்கு கொண்டுசென்று விடும். தனியார் துறையில் அப்படியில்லை. நித்திய கண்டம் தான். அதுசரி, தனியார் துறையில் ஒவ்வோர் ஊழியரின் தகுதியும், ஒவ்வொரு ஆண்டும் பரிசீலிக்கப்படும். ஆனால், மேலேசொன்ன இரு துறைகளில் இந்த முறை இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தால், தற்போது தி.மு.க. M.P. க்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. ஏனெனில், சென்ற முறை அவர்கள் சம்பளம், சலுகைகள், பென்ஷன், பதவி சுகத்தை அனுபவித்தனர் தவிர, தமிழகத்திற்கு என்று ஏதாவது மத்திய அரசிடம் நேரிடையாக பேசி, ஏதாவது திட்டம் கொண்டுவந்தனரா ?? அட, குறைந்தபட்சம் சுமார் இருநூறு மில்லி மட்டுமே வழக்கப்படும், அத்தியாவசிய தேவையான மண்ணெண்ணெயை கூட பத்து லிட்டர் பெற்று தந்தனரா ?? இது ஏற்கனவே வழங்கப்பட்டது தானே ?? இப்போது சொல்லுங்கள். உண்மையிலேயே மேற்சொன்னவற்றை நினைத்துபார்த்திருந்தால், அந்த அடிப்படைவிஷயம் இருந்திருந்தால், தி.மு.க. தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்றிருக்குமா ?? இலவசத்திருக்கும், சாராயத்திருக்கும் அடிமையானத்தின் விளைவு தான் இது. ஆனால், இவர்களின் பெரும்பான்மையான இந்த அடிமைத்தனத்திற்கு, ஒரு மாநிலத்தையும், அதன் ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் மீதியுள்ள மக்களையும் பலிவாங்கியது நியாயமா ?? இதற்கு இவர்கள் தான் பொறுப்பு. இனி வாயை கட்டி / வயிற்றை கட்டி அரசுக்கு வரி செலுத்தும் ஏழை / பாழய் / தனியாரின் வியர்வை மற்றும் ரத்தமான வருமானம், பொறுப்பில்லாத M.P. க்களுக்கு சம்பளம் / சலுகை மற்றும் பென்ஷனாக செல்லும். இதை இவர்களுக்கு யார் எப்படி எடுத்து சொல்லி புரிய வைப்பது ?? பூனைக்கு எப்படி மணியை கட்டுவது ?? அடக்கடவுளே, எங்களை காப்பாற்று.


Narayanan
ஜூன் 06, 2024 16:09

மிக சரியாக சொன்னீர்கள். செய்த செயலுக்கான நற்பலன்கள் பலன் மற்றும் கொடுமையான பின்விளைவுகள் எப்பொழுதும் தப்பியதேயில்லை. காலம் இதை சரியான நேரத்தில் கொடுத்தே தீரும்.


kulandai kannan
ஜூன் 06, 2024 11:52

திமுக கூட்டணி 52 % இருந்து 46 % க்கு குறைந்தது ஏன்?


ஆரூர் ரங்
ஜூன் 06, 2024 11:32

மோதி சரியான ராஜதந்திரியாக இருந்தால் திமுக போன்ற நம்பிக்கைக்குரிய கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சியை அமைத்திருப்பாரு.(டூ ஜி மாதிரி சின்ன அமவுண்ட் சாப்பிடுவதை அனுமதித்தால் போதும்.) உதாரணமாக குஜராத் கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியை விட்டு விலகவில்லை. ஒன்றரை லட்சம் தமிழர்களின் படுகொலைக்காகவும் விலகவில்லை. சம்பாதிக்க மட்டும் அனுமதித்தால் எல்லாவற்றுக்கும் தலையாட்டும் நம்பிக்கையான தோழமைக் கட்சி . மோதி பிழைக்கத் தெரியாத ஆள்.


Ramanujadasan
ஜூன் 06, 2024 12:11

திமுக ஒரு கான்சர், அது எப்போதும் மற்ற உயிரை சார்ந்து வாழும், அந்த உயிரின் ரத்தத்தை குடித்து அதை கொல்லும் . பிஜேபி யுடன் அது சேராதது அனைவருக்கும் நல்லது


Ramanujadasan
ஜூன் 06, 2024 10:11

அதிமுக கேவலமாக தோற்று இருக்கிறது, திமுக அதை விட கேவலமாக. காங்கிரஸ் ஓ சொல்லவே வேண்டாம். கேவலத்திலும் கேவலமாக. மற்ற கட்சிகளோ, காசுக்கு எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயும் கட்சிகள். கொள்கை இல்லாத நாடக கம்பெனிகள் அவை. இந்த கட்சிகளின் கேவலமான தோல்விகளுக்கு முன்னர், இந்த தேர்தலில் தோல்வி அடையாத ஆனால் பின்னடைவை சந்தித்த பிஜேபி எவ்வளவோ மேல். அந்த கொள்ளை கட்சிகளுக்கு பிஜேபியை குறை சொல்ல அருகதை சுத்தமாக கிடையாது


Ram
ஜூன் 06, 2024 09:54

தம்பி, பிஜேபி 240 ஆனா கொங்கிரஸ் 99.


Ramanujadasan
ஜூன் 06, 2024 09:47

பல சமயங்களில் பெரும் வேட்டையாடி எதிரிகளை துவம்சம் செய்து பெரும் வெற்றிகள் பெற்ற சிங்கம் சிறிது காயம் அடைந்து ச றுக்கி விட்டது . ஆனாலும் வேட்டை ஆடியது . முழு திருப்தி இல்லை . அவ்வளவே . இந்த காயமடைந்த சிங்கம் கர்ச்சித்தால் கூட , குள்ள நரிகளும் , ஓநாய்களும், கழுதை புலிகளும் , நாய்களும் கலக்கம் அடைந்து ஓடி போவர். காயத்தினால் சிங்கத்தின் ஏற்றமும் சீற்றமும் குறைவதில்லை . பழுது அடைந்தாலும் தங்கம் தங்கமே


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி